Automobile Tamil

இந்தியாவின் டாப் 7 எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பாளர்கள் – FY 2023

ola11

கடந்த 2022-2023 ஆம் நிதி ஆண்டில் எலக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனை முந்தைய 2022 ஆம் நிதி ஆண்டை விட 185 % வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 2023 நிதியாண்டில் 7,20,733 யூனிட்கள் விற்பனையாகி, முந்தைய FY2022 நிதி ஆண்டில் 2,52,539 எண்ணிக்கையில் விற்பனை ஆகியிருந்தது.

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பாளராக விளங்குகின்றது. 2022-2023 ஆம் நிதியாண்டில் மொத்தமாக 1,51,344 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. எனவே, நாட்டின் எலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் 21 சதவீத சந்தை மதிப்பினை பெற்றுள்ளது. மேலும் முதன்முறையாக ஒரு ஆண்டிற்குள் 1,00,000 எண்ணிக்கையை கடந்த முதல் தயாரிப்பாளராகும்.

ஒகினவா எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர், 2023 நிதியாண்டில் 94,133 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து இரண்டாமிடத்தில் உள்ளது.

ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம், பல ஆண்டுகளாக சந்தையில் சிறப்பான வளர்ச்சி அடைந்திருந்தாலும் FAME சலுகை நீக்கப்பட்டதால், மொத்தமாக 89,165 யூனிட்டுகள் விற்பனை செய்துள்ளது.

ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாகனங்கள் 83,659 யூனிட்களுடன் நான்காம் இடத்தில் உள்ளது, இந்நிறுவனம் மிக சிறப்பாக வளர்ந்து வரும் தயாரிப்பு போர்ட்ஃபோலியோ மூலம் பயனடைகிறது.

ஐந்தாம் இடத்தில் டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் iQube இ-ஸ்கூட்டர் மாடல் 80,565 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனம் 2024 நிதியாண்டில் புதிய எலக்ட்ரிக் பைக் மற்றும் ஸ்கூட்டர்களை வெளியிட உள்ளது.

ஏதெர் எனெர்ஜி நிறுவனம், 76,277 யூனிட்டுகளை விற்பனை செய்து நாட்டின் 6வது பெரிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளராக உள்ளது.

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சேட்டக் எலக்ட்ரிக் மாடல் மொத்தமாக  28,098  யூனிட்டுகள் மட்டுமே விற்பனை செய்துள்ளது.

 

 

Exit mobile version