Automobile Tamilan

டிரையம்ப் ஸ்கிராம்பளர் 400 X பைக்கின் மைலேஜ், டாப் ஸ்பீடு, ஆன்-ரோடு விலை

Triumph Scrambler 400 X

பஜாஜ்-டிரையம்ப் கூட்டணியில் உருவான முதல் 400சிசி பிரிவு மாடலான ஸ்கிராம்பளர் 400 X பைக்கின் முக்கிய கேள்விகளுக்கு அனைத்து பதில்களும் ஒரே தொகுப்பாக அறிந்து கொள்ளலாம். 400எக்ஸ் விலை ரூ.2,62,996 (எக்ஸ்-ஷோரூம்) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்பே ஸ்பீடு 400 விற்பனையில் உள்ள தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Faq Triumph Scrambler 400 X

புதிய TR சீரிஸ் என்ஜின் 398.15cc DOHC சிங்கிள் சிலிண்டர் லிக்யூடு கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 8,000 rpm-ல் 40 hp பவரையும், 6,500 rpm-ல் 37.5 Nm டார்க்கையும் வழங்குகிறது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

டிரையம்ப் ஸ்கிராம்பளர் 400 X என்ஜின் விபரம் ?

ஸ்கிராம்பளர் 400 எக்ஸ் பைக்கில்TR சீரிஸ் 398.15cc DOHC சிங்கிள் சிலிண்டர், லிக்யூடு கூல்டு என்ஜின் 8,000 rpm-ல் 40 hp பவரையும், 6,500 rpm-ல் 37.5 Nm டார்க். இதில் 6 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

டிரையம்ப் ஸ்கிராம்பளர் 400 X பைக்கின் டாப் ஸ்பீடு எவ்வளவு ?

ஸ்கிராம்பளர் 400 X பைக்கின் ஸ்பீடு அதிகபட்சமாக மணிக்கு 160 கிமீ ஆகும்.

ஸ்கிராம்பளர் 400 X பைக்கின் மைலேஜ் எவ்வளவு ?

ஸ்கிராம்பளர் 400 X பைக்கின் மைலேஜ் சராசரி 30kmpl ஆகும்.

டிரையம்ப் ஸ்கிராம்பளர் 400 X சஸ்பென்ஷன் விபரம்

ஸ்கிராம்பளர் 400 X பைக்கில் 43 மிமீ அப்சைடு டவுன் முன் ஃபோர்க்குகள் பொருத்தப்பட்டு 150 மிமீ பயணத்தை வழங்குகிறது. பின்பக்கத்தில் 150 மிமீ பயணக்கின்ற மோனோஷாக் ரியர் சஸ்பென்ஷன் உள்ளது.

டிரையம்ப் ஸ்கிராம்பளர் 400 X பிரேக் விபரம் ?

ஸ்கிராம்பளர் 400 X பைக்கில் நான்கு பிஸ்டன் ரேடியல் காலிபர் உடன் முன்பக்கத்தில் 320 mm நிலையான டிஸ்க் மற்றும் பின்பக்கத்தில் 230 mm டிஸ்க் உடன் டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளது.

டிரையம்ப் ஸ்கிராம்பளர் 400 எக்ஸ் டயர் மற்றும் வீல் அளவு ?

100/90 R19 முன்பக்கத்தில் மற்றும் பின்பக்கத்தில் 140/80 R17 ஆக உள்ளது.

ஸ்கிராம்பளர் 400 எக்ஸ் உள்ள நிறங்கள் எத்தனை ?

மேட் காக்கி பச்சை உடன் வெள்ளை, சிவப்பு உடன் கருப்பு, கருப்பு உடன் சில்வர் ஐஸ் என மூன்று நிறங்களை கொண்டுள்ளது.

ஸ்கிராம்பளர் 400 பைக்கின் வெட் எடை எவ்வளவு ?

டிரையம்ப் ஸ்கிராம்பளர் 400 எக்ஸ் பைக்கின் வெட் எடை 185 கிலோ ஆகும்.

டிரையம்ப் ஸ்கிராம்பளர் 400 X இருக்கை உயரம் எவ்வளவு ?

ஸ்கிராம்பளர் 400 X இருக்கை உயரம் 835 mm ஆகும்

டிரையம்ப் ஸ்கிராம்பளர் 400 X ஆன்-ரோடு விலை எவ்வளவு ?

தமிழ்நாட்டின் டிரையம்ப் ஸ்கிராம்பளர் 400 X ஆன்-ரோடு விலை ₹ 3,13,765

Exit mobile version