Automobile Tamilan

புதிய ஹார்லி-டேவிட்சன் X 500 பைக் அறிமுகம்

சீன சந்தையில் ஹார்லி-டேவிட்சன் மற்றும் QJ மோட்டார்ஸ் கூட்டணியில் தயாரிக்கப்பட்டுள்ள ஹார்லி-டேவிட்சன் X 500 பைக் மாடல் பல்வேறு நாடுகளில் விற்பனைக்கு செல்ல உள்ளது.

விற்பனையில் கிடைக்கின்ற பெனெல்லி லியோன்சினோ 500 பைக்கின் என்ஜினை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள இந்த மாடலின் விலை சீன சந்தையில் CNY 44,000 (தோராயமாக ரூ.5.24 லட்சம்) ஆகும்.

Harley-Davidson X 500 engine

பெனெல்லி நிறுவனத்தின் லியோன்சினோ 500 பைக்கின் பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள ஹார்லி எக்ஸ் 500 மாடல் 500cc, லிக்விட்-கூல்டு பேரலல் ட்வின்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு 47 bhp மற்றும் 46 Nm டார்க் வெளிப்படுத்தும் ஆறு வேக கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

X 500 பைக்கில் உள்ள சேஸ் மற்றும் ஸ்விங்கார்ம் ஆகியவை லியோன்சினோவில் உள்ளதை போலவே தோன்றுகின்றன. முன்புறத்தில் USD ஃபோர்க்குகள் மற்றும் மோனோஷாக் அப்சார்பர் பெற்று பிரேக்கிங் அமைப்பில் இரட்டை டிஸ்க் முன்புறத்திலும், பின்புறத்தில் ஒற்றை டிஸ்க் ஏபிஎஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

ஹார்லி-டேவிட்சன் X500 பைக்கில் உள்ள செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலில்  ஸ்பீடோமீட்டர், ட்ரிப் மீட்டர், ஓடோமீட்டர், எரிபொருள் அளவு இண்டிகேட்டர் மற்றும் கியர் பொசிஷன் இண்டிகேட்டர் ஆகியவை பெற்றுள்ளது.

சில வாரங்களுக்கு முன்பாக சீன சந்தையில் ஹார்லி X 350 மாடலும் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்திய சந்தைக்கு பிரத்தியேகமாக ஹார்லி-டேவிட்சன் மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் இணைந்து தயாரிக்கின்ற ஹார்லி HD 4XX எனப்படும் 400cc+ என்ஜின் பொருத்தப்பட்ட மாடல் அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வெளியாகும்.

Exit mobile version