Automobile Tamilan

ஹார்லி-டேவிட்சன் X440 பைக் எதிர்பார்ப்புகள் என்ன ?

harley x440 bike tank

ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹார்லி-டேவிட்சன் கூட்டணியில் தயாரிக்கப்பட்டுள்ள X440 பைக்கில் 440cc என்ஜின் பெற்று அதிகபட்சமாக 35 hp பவரை வழங்கலாம். பல்வேறு கனெக்ட்டி வசதிகளை பெற்று டாப் வேரியண்ட் உடன் மொத்தமாக நான்கு விதமான வேரியண்டுகளில் எதிர்பார்க்கலாம்.

ஜூலை 3 ஆம் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள ஹார்லி எக்ஸ் 440 பைக்கிற்கு போட்டியாக ராயல் என்ஃபீல்டு, ஜாவா, ஹோண்டா ஹைனெஸ் மற்றும் ட்ரையம்ப் 400சிசி பைக்குகள் வரவுள்ளன.

Harley X440

தயாரிப்பு, விநியோகம், விற்பனை மற்றும் விற்பனைக்கு பிந்தைய சேவையை ஹீரோ மோட்டோகார்ப் கவனித்துக் கொள்ளும்.  25,000 முன்பணம் செலுத்தி X440 பைக்கினை முன்பதிவு செய்யலாம்.

X440 ஆனது 440cc சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் 40 bhp பவர் மற்றும் 35 Nm டார்க் வெளிப்படுத்தலாம்.இதில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் கிளட்ச் அசிஸ்ட் இடம்பெற்றிருக்கலாம்.

X 440 பைக்கில் அப் சைடு டவுன் ஃபோர்க் மற்றும் ட்வின் ஷாக் அப்சார்பர் கொண்டுள்ளது. இருபக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டு டூயல் சேனல் ஏபிஎஸ் உடன்  முன்புறத்தில் 18 அங்குல அலாய் வீல் மற்றும் 17 அங்குல பின்புற அலாய் வீலுடன் எம்ஆர்எஃப் டயரினை பெற்றுள்ளது.

ஜூலை 3, 2023-ல் ஹார்லி-டேவிட்சன் X 440 விலை ரூ.2.25 லட்சம் என அறிவிக்கப்படலாம்.

Harley X440 Image Gallery

Exit mobile version