புதிய நிறங்களில் ஹார்லி டேவிட்சன் X440 பைக் விற்பனைக்கு வந்தது

x440

ஹீரோ மற்றும் ஹார்லி டேவிட்சன் கூட்டணியில் தயாரிக்கப்பட்ட X440 பைக்கில் தற்பொழுது மூன்று புதிய நிறங்களை இந்நிறுவனம் சேர்த்துள்ளது. Vivid மற்றும் டாப் S வேரியண்டுகளில் மட்டும் சேர்க்கப்பட்டுள்ள இந்த நிறங்களானது பேஸ் வேரியன்டான Denim-ல் சேர்க்கப்படவில்லை.

டாப் S வேரியன்டில் முன்பாக மேட் பிளாக் என்ற ஒற்றை நிறம் மட்டும் பெற்று வந்த நிலையில் தற்பொழுது பாஜ ஆரஞ்சு என்ற நிறம் சேர்க்கப்பட்டுள்ளது. அடுத்து நடுத்தர வேரியண்ட் Vividல் கோல்ட்ஃபிஸ் சில்வர் மற்றும் மஸ்டார்டு என இரு நிறங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. முன்பாக இதில் டார்க் சில்வர், சிவப்பு நிறம் மற்றும் இடம்பெற்றிருந்தது.

இந்த மோட்டார்சைக்கிளில் 440cc சிங்கிள் சிலிண்டர் ஏர் ஆயில் கூல்டு என்ஜின் 6000 rpm-ல் 27 bhp பவர் மற்றும் 4000rpm-ல் 38 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது.. இதில் 6 வேக கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

S வேரியண்டில் டைமண்ட் கட் அலாய் வீல், பிராண்ஸ்டு என்ஜின் வசதி, கனெக்டேட் வசதிகளை பெறுகின்றது. கனெக்ட் வசதி மூலம் 3.5 இன்ச் டிஎஃப்டி டிஸ்பிளே,  நிகழ் நேரத்தில் எரிபொருள் இருப்பு, ரேஞ்ச் டிஸ்ப்ளே, கியர் பொசிஷன் இண்டிகேட்டர், ஸ்பீடோமீட்டர், டர்ன் இன்டிகேஷன், ஹை பீம் இன்டிகேட்டர், ஏபிஎஸ் அலர்ட், சைட் ஸ்டாண்ட் அலர்ட், சர்வீஸ் இன்டிகேஷன், குறைந்த எரிபொருள் எச்சரிக்கை, நியூட்ரல் பொசிஷன் இன்டிகேட்டர் ஆகியவற்றை பெற்றுள்ளது.

டர்ன் பை டர்ன் நேவிகேஷன், மியூசிக் கண்ட்ரோல், அழைப்புகளை ஏற்றுக்கொள்வது மற்றும் நிராகரிப்பது, ஸ்மார்ட்போன் பேட்டரி நிலை, தவறவிட்ட அழைப்பு எச்சரிக்கை, செய்தி எச்சரிக்கை மற்றும் நெட்வொர்க் ஸ்டெர்ன்த் ஆகியவற்றை உள்ளடக்கியது.

புதிய நிறங்களை தவிர மற்றபடி விலையில் எந்த ஒரு மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை.

2024 Harley-Davidson x440 price list

(EX-SHOWROOM)

Exit mobile version