ஹீரோ கனெக்ட் இணைப்பு சேவையை துவங்கிய ஹீரோ மோட்டோகார்ப்

xpulse 200

ரூ.4,999 விலையில் அறிவிக்கப்பட்டுள்ள ஹீரோ கனெக்ட் என்ற பெயரில் கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. கிளவுட் அடிப்படையிலான ஸ்மார்ட் வசதிகளை வழங்க உள்ளது.

இணைக்கப்படுக்கின்ற செயல்பாட்டின் வாயிலாக புதிய சகாப்தத்திற்கான புதுமையான வசதிகளுடன் ஹீரோ கனெக்ட் வழங்கப்பட உள்ளது.
எக்ஸ்பல்ஸ் 200, பிளெஷர் +, பேஷன் எக்ஸ்ப்ரோ மற்றும் எச்.எஃப் டீலக்ஸ் உட்பட நான்கு மாடல்களில் முதற்கட்டமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது நெய்டா, டெல்லி மற்றும் புனே பகுதிகளில் கிடைக்க துவங்கியுள்ளது.

குறிப்பாக இந்த ஹீரோ கனெக்ட் மூலமாக லைவ் டிராக்கிங், டாப்பிள் அலர்ட்ஸ் (விபத்து எச்சரிக்கை) போன்ற அம்சங்கள் மூலம் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை வழங்குதல், குறிப்பிட்ட எல்லையில் பயணிக்க அனுமதிக்கும் ஜியோ ஃபென்ஸ் அலர்ட், ஸ்பீட் அலர்ட் போன்றவற்றையும் கொண்டுள்ளது.

மேம்பட்ட மற்றும் பாதுகாப்பான சவாரி நோக்கமாக கொண்டு வழங்கப்படுகின்ற இந்த கனெக்ட் சேவையின் அறிமுக ஆரம்ப விலை ரூ.4999 / – (வரிகளை உள்ளடக்கியது) ஆக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விலை குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் வழங்கப்பட உள்ளது.

ஹீரோ கனெக்ட் ஆப் பயன்பாட்டினை இரு சக்கர வாகனத்தில் பாதுகாப்பாக பொருத்தப்பட்ட உள்ளமைக்கப்பட்ட சிம் கொண்ட டெலிமேடிக்ஸ் ஆனது பயன்படுத்துகிறது. செல்லுலார் நெட்வொர்க்கைப் பயன்படுத்தி கிளவுட் முறையில் தரவினை சேமிக்கும் போது, தகவல்களை பெற்று மொபைலில் வழங்கப்பட உள்ளது.

Exit mobile version