Warning: Trying to access array offset on false in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/jnews-amp/include/class/class-init.php on line 427

Warning: Trying to access array offset on false in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/jnews-amp/include/class/class-init.php on line 428
ரூ. 29,990 ஆரம்ப விலையில் ஹீரோ எலக்ட்ரிக் ஃப்ளாஷ் இ-ஸ்கூட்டர் கிடைக்கிறது | bike news in tamil

ரூ. 29,990 ஆரம்ப விலையில் ஹீரோ எலக்ட்ரிக் ஃப்ளாஷ் இ-ஸ்கூட்டர் கிடைக்கிறது

hero flash e-scooter

ஹீரோ எலக்ட்ரிக் தயாரிப்பாளரின் ஃப்ளாஷ் லெட் ஆசிட் பேட்டரி கொண்ட மாடல் ரூ.7,088 விலை குறைக்கப்பட்டு, இப்போது ரூ.29,990 என நிர்ணையிக்கப்பட்டுள்ளது. மேலும், பேடிஎம் வாயிலாக லித்தியம் ஐயன் மற்றும் லெட் ஆசிட் பேட்டரி கொண்ட ஹீரோ இ-ஸ்கூட்டர் வாங்குவோருக்கு ரூ.10,500 வரை அதிகபட்சமாக சலுகை வழங்கப்படுகின்றது.

இந்நிறுவனத்தின் குறைந்த விலை ஃப்ளாஷ் மாடலாகும். இந்த மின்சார இரு சக்கர வாகனம் இளம் மற்றும் முதல் முறையாக மின் வாகனங்ளை வாங்குபவர்களை இலக்காகக் கொண்டு விற்பனை செய்யப்படுகின்றது. இதில் 48 வோல்ட் பேட்டரி கொண்டு 550W பி.எல்.டி.சி மோட்டாருக்கு மூலம் இயக்கப்படுகின்றது. இது இ-ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சமாக 25 கிமீ அதிக வேகத்தை அளிக்கிறது. அதிகபட்சமாக நான்கு முதல் ஐந்து மணி நேரம் சார்ஜ் நேரம் தேவைப்படுகிறது.

அதிகபட்சமாக இந்த ஸ்கூட்டர் முழுமையான சார்ஜில் 50 கிமீ தொலைவு வழங்குகின்றது.

69 கிலோ கிராம் எடை கொண்டு ஃப்ளாஷ் ஸ்கூட்டருக்கு எல்இடி ஹெட்லைட், ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம், மொபைல் சார்ஜிங் போர்ட், டிஜிட்டல் கிளஸ்ட்டர் போன்றவற்றை கொண்டுள்ளது.

Exit mobile version