Automobile Tamilan

இந்தியாவின் குறைந்த விலை க்ரூஸ் கண்ட்ரோல் ஹீரோ கிளாமர் எக்ஸ் 125 சிறப்புகள்

New Hero Glamour X 125 on road price

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 125சிசி சந்தையில் முதன்முறையாக க்ரூஸ் கண்ட்ரோல் உடன் கூடிய கிளாமர் X 125 பைக்கின் விலை ரூ.91,999 முதல் ரூ.99,999 வரை (எக்ஸ்-ஷோரும்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

க்ரூஸ் கண்ட்ரோல் வசதிக்கு ரைட் பை வயர் நுட்பத்தின் மூலம் கையாளப்படுவதனால் இதற்கு AERA ( Advanced Electronic Ride Assist) Tech என பெயரிடப்பட்டு மிக நீண்ட தொலைவு பயணம் மேற்கொள்பவர்களுக்கு அதிக சிரமம் இல்லாத பயணத்தை மேற்கொள் உதுவுகின்றது. அடுத்தப்படியாக, Eco, Road மற்றும் Power என மூன்று விதமான ரைடிங் மோடுகள் உள்ளது.

மற்றொரு மிக முக்கியமான வசதி குறைந்த பேட்டரி உள்ள தருனங்களிலும் பைக்கை ஸ்டார்ட் செய்வதற்கு ஏற்ற வகையில் ஸ்மார்ட் சொலினாய்டு வால்வு

கிளாமர் எக்ஸில் Sprint EBT engine 124.7cc சிங்கிள் சிலிண்டர் என்ஜின் அதிகபட்சமாக 8,250 rpm-ல் 11.4 hp பவர் மற்றும் 6,500rpm-ல் 10.4 Nm டார்க் பெற்ற பைக்கில் ஐந்து வேக கியர்பாக்ஸுடன் கிடைக்கின்றது.

இந்த பைக்கில் தொடர்ந்து முன்புறத்தில் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் பெற்று பின்புறத்தில் ட்வீன் ஷாக் அப்சார்பர் பெற்று, பிரேக்கிங் அமைப்பில் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டத்துடன் முன்புறத்தில் டிஸ்க் அல்லது டிரம் பிரேக் மற்றும் பின்புறத்தில் பொதுவாக டிரம் பிரேக் ஆப்ஷன் உள்ளது.

சற்று உயரமான வீன்ஷீல்டு, எல்இடி ஹெட்லைட், டெயில் லைட் பெற்று கூடுதலாக எல்இடி வின்கர்ஸ் உட்பட பேனிக் பிரேக் அலர்ட் கொண்டதாக டாப் வேரியண்ட் உள்ள து. மற்றபடி, 4.2 அங்குல அடாப்ட்டிவ் கலர் TFT கிளஸ்ட்டர் வழங்கப்பட்டு பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன் கியர் பொசிஷன் இன்டிகேட்டர், மைலேஜ் , பெட்ரோல் இருப்பினை கொண்டு பயணிக்கும் தொலைவை அறிவது என பல்வேறு அம்சங்களை பெற்றுள்ளது.

(Ex-showroom)

Exit mobile version