Automobile Tamilan

ஹீரோ கரீஸ்மா XMR 210 டிசைன் காப்புரிமை படம் வெளியானது

karizma xmr 210

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற புதிய கரீஸ்மா XMR 210 பைக்கின் வடிவமைப்பு காப்புரிமை கோரி விண்ணபித்து அனுமதி பெற்ற படங்கள் வெளியானது. அடுத்த சில வாரங்களுக்கு கரீஸ்மா விற்பனைக்கு வரக்கூடும்.

சில வாரங்களுக்கு முன்பாக ஹீரோ டீலர் கூட்டத்தில் கரீஸ்மா 210 பைக்கின் படங்கள் வெளியானது. மேலும் தொடர்ந்து சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றது.

Hero Karizma XMR 210

முதன்முறையாக ஹீரோ மோட்டோகார்ப் லிக்யூடு கூல்டு என்ஜின் பொருத்தப்பட்ட மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. 210cc லிக்யூடு கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 25 Hp பவர் மற்றும் 35 Nm வரையிலான டார்க் வெளிப்படுத்துவதுடன், இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் கிளட்ச் அசிஸ்ட் கொடுக்கப்பட்டிருக்கும்.

முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பருடன் இருபக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டு டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்றிருக்கலாம்.

இந்த மாடலில் எல்இடி ஹெட்லைட், எல்இடி இண்டிகேட்டர்களுடன் குறைந்த செட் கிளிப் ஆன் ஹேண்டில்பார் பெற்று டிஜிட்டல் கிஸ்ட்டருடன் முழுமையாக ஃபேரிங் பேனல்களுடன் நவீனத்துவமான பாடி கிராபிக்ஸ் பெற்றிருக்கலாம்.

ஹீரோ கரீஸ்மா 210 பைக் அடுத்த சில மாதங்களுக்குள் விற்பனைக்கு ரூ.1.70 லட்சத்தில் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

Exit mobile version