Site icon Automobile Tamil

ரூ. 1.08 லட்ச விலையில் ஹீரோ கரீஸ்மா ZMR இந்தியாவில் மீண்டும் அறிமுகம்

ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு ஹீரோ கரீஸ்மா ZMR இந்தியாவில் மீண்டும் அறிமுகம் செய்யபபட்டுள்ளதை நிறுவனத்தின் இணையத்தளம் வெளியிட்டுள்ளது. 2018ம் ஆண்டுக்கான ஹீரோ கரீஸ்மா ZMR இரண்டு வைப்ப்ரன்ட்களில் கிடைக்கிறது. அவை ஸ்டாண்டர்ட் மற்றும் டுயல் டோன் வகையில் கிடைக்கிறது. இவை முறையே 1.08 லட்ச ரூபாய் மற்றும் 1.10 லட்ச ரூபாய் விலையில் (எக்ஸ் ஷோரூம் விலை டெல்லியில்) விற்பனை செய்யப்படுகிறது.

ஹீரோ கரீஸ்மா ZMR மாடல்கள் இன்னும் அவுட்லேட்களில் காட்சிக்கு வைக்கப்படாத நிலையிலும், ஹீரோ டீலர்ஷிப்கள் ஹீரோ கரீஸ்மா ZMR புக்கிங்கை தொடங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட போது, BS-IV அப்டேட் செய்யவதில் தவறியதை தொடர்ந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கரீஸ்மா பைக்குகளை திரும்ப பெற்றது.

2018 ஹீரோ கரீஸ்மா ZMR-ல் எந்த காஸ்மெடிக் மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த மாடல் 2018 ஆட்டோ எக்ஸ்போகில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்த பைக், 223cc சிங்கிள் சிலிண்டர், ஆயில் கூல்டு இன்ஜினுடன் எரிபொருள் இன்ஜெக்ஷன் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது. தற்போது BS-IV புகாரை தொடர்ந்து, இந்த பைக் 8000 rpmல் 20bhp பவர் மற்றும் உட்சபட்ச டார்க்யூ-வில் 19.7Nm இருக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும் 5 ஸ்பீட் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஹீரோ கரீஸ்மா ZMR 129 Kmph அதிக வேகத்தில் இயங்கும் என்று ஹீரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. சஸ்பென்ஷனை பொறுத்தவரை முன்பக்கம் டெலிஸ்கோப்பிக் போர்க்ஸ் மற்றும் பின்பக்கத்தில் டுவின் சாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

இரண்டு வீல்களிலும் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. புதியாக அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ்டிரீம் 200R-ல் பாதுகாப்பு அம்சங்கள் பொருத்தப்பட்டிருந்தது. விலையை ஒப்பிடும் போது ஹீரோ கரீஸ்மா ZMR, பஜாஜ் பல்சர் RS 200, சுசூகி Gixxer SF ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.

Exit mobile version