பிஎஸ்-6 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 110 ஸ்கூட்டரின் விபரம்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பிஎஸ்-6 இன்ஜின் பெற்ற மேஸ்ட்ரோ எட்ஜ் 110 மாடலின் விபரம் தனது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விலை அடுத்த சில நாட்களில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.

முந்தைய பிஎஸ்-4 மாடலின் தோற்ற அமைப்பில் தொடர்ந்து வந்துள்ள மேஸ்ட்ரோ எட்ஜில் புதுப்பிக்கப்பட்ட பாடி கிராபிக்ஸ் மட்டும் கூடுதல் கவனத்தைப் பெறுகின்றது. இந்த ஸ்கூட்டரில் நீலம், வெள்ளை, சிவப்பு, சில்வர், கருப்பு மற்றும் டெக்னோ நீலம் என மொத்தமாக 6 வண்ணங்களை பெறுகின்றது.

110.9cc ஒற்றை சிலிண்டர் பிஎஸ்-6 இன்ஜின் அதிகபட்சமாக 7500 RPM-ல் 8 hp பவர் மற்றும் 5500 RPM-ல் 8.75 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. முந்தைய மாடலை விட மிக சிறப்பான எரிபொருள் சிக்கனம் மற்றும் செயல்திறனை வழங்கும் என ஹீரோ குறிப்பிட்டுள்ளது.

இருபக்க டயர்களிலும் டிரம் பிரேக் உடன் ஐபிஎஸ் பெற்று சிறப்பான பிரேக்கிங் திறனுடன், முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்கு மற்றும் பின்புறத்தில் யூனிட் ஸ்விங் ஸ்பீரிங் லோடேட் ஹைட்ராலிக் டேம்ப்பர் கொண்டுள்ளது. ஹாலஜென் ஹெட்லைட் உடன் பின்புறத்தில் எல்இடி டெயில் லைட், செமி டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 110 BS6 வரவுள்ளது. புதிய மாடலின் விலை அடுத்த சில நாட்களில் அறிவிக்கப்படலாம்.