Bike News

இந்தியாவின் முதல் பிஎஸ்6 டூ வீலர் ஹீரோ ஸ்பிலெண்டர் ஐஸ்மார்ட்

hero splendor ismart

ஹீரோ மோட்டோகார்ப், இந்தியாவின் முதல் பிஎஸ்6 மாசு கட்டுப்பாடு விதிகளுக்கு ஏற்ப ஹீரோ ஸ்பிலெண்டர் ஐஸ்மார்ட் முதல் இரு சக்கர வாகனமாக அனுமதி சான்றிதழை சர்வதேச ஆட்டோமொபைல் தொழில்நுட்ப மையம் (ICAT) வழங்கியுள்ளது. இந்தியாவின் முதன்மையான இரு சக்கர வாகன தயாரிப்பாளராக ஹீரோ மோட்டோகார்ப் விளங்குகின்றது.

ஹோண்டா நிறுவனம் முதல் பிஎஸ்6 ஸ்கூட்டர் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், முதல் இரு சக்கர வாகனம் பாரத் ஸ்டேஜ் 6 அல்லது BS6 மாசு கட்டுப்பாடு விதிகளுக்கான சான்றிதழை பெற்றுள்ளது.

பிஎஸ்6 ஹீரோ ஸ்பிலெண்டர் ஐஸ்மார்ட்

இந்தியாவின் மிகப்பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பாளின் ஜெய்ப்பூரில் அமைந்துள்ள ஹீரோவின் மத்திய தொழில்நுட்ப புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பம் மையத்தால் வடிவமைக்கப்பட்டு பாரத் ஸ்டேஜ் 6 மாசு கட்டுப்பாடு விதிகளுக்கு ஏற்ற  இரு சக்கர வாகனம் முதன்முறையாக இந்தியளவில் பிஎஸ்6 மாடலுக்கு ஸ்பிலெண்டர் ஐஸ்மார்ட் அனுமதியை பெற்றுள்ளது. இதன் மூலம் ஹீரோவில் தொழிற்நுட்ப திறன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

BS6 மாசு கட்டுப்பாடு என்ஜினிற்கான சான்றிதழை பெறும் நாட்டின் முதல் இரு சக்கர உற்பத்தியாளராக விளங்கும் ஹீரோ மோட்டோகார்பை வாழ்த்துவோம் என ICAT -யின் இயக்குனர் தினேஷ் தாகி தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், BS6 மாசு உமிழ்வு தரநிலைகள் மீதான விரிவுபடுத்தலில் மிகவும் விரிவானவை மற்றும் நுகர்வோர்களுக்கு மிகவும் தரமான மாடல்களை உறுதிப்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.

International Centre for Automotive Technology (ICAT) என்பபடுவது மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் மூலம் இயங்குகின்ற வாகனத்தினை ஆய்வு செய்கின்ற மையமாகும்.

Share
Published by
MR.Durai