Automobile Tamilan

ஹீரோ ஸ்கூட்டர்களின் ஆன்-ரோடு விலை பட்டியல் – ஏப்ரல் 2024

hero scooty on road price 2024

நாட்டின் முதன்மையான இருசக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்கூட்டர் மாடல்களின் என்ஜின், சிறப்பம்சங்கள், மைலேஜ் மற்றும் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை பட்டியல் என அனைத்தும் அறிந்து கொள்ளலாம்.

ஹீரோ நிறுவனம் 110cc சந்தையில் பிளெஷர் பிளஸ் எக்ஸ்டெக், ஜூம் 110 மற்றும் 125cc சந்தையில் டெஸ்ட்டினி 125 எக்ஸ்டெக், மற்றும் டெஸ்டினி பிரைம் ஆகிய 4 மாடல்களை விற்பனை செய்து வருகின்றது.

2024 Hero Pleasure+ XTECH

ஹீரோ நிறுவனத்தின் மற்றொரு 110cc ஸ்கூட்டர் மாடலான பிளெஷர் பிளஸ் 110 மாடலில் கனெக்ட்டிவிட்டி சார்ந்த Xtech அம்சத்தை கொண்டுள்ளது. இரு பக்க டயர்களிலும் 130 மிமீ டிரம் பிரேக் பெற்றதாக உள்ளது. மிக சிறப்பான கனெக்ட்டிவ் வசதியுடன் கூடுதலாக வந்துள்ள ஸ்போர்ட்ஸ் எடிசனில் ஆரஞ்ச் நிறத்துடன் மேம்பட்ட பாடி கிராபிக்ஸ் 18 என்ற எண்ணுடன் மிகவும் நேர்த்தியாக அமைந்துள்ளது.

ஹீரோ பிளெஷர் பிளஸ் மாடல் விலை ₹ 68,198 முதல் ₹ 82,598 (எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு). பிளெஷர் பிளஸ் ஸ்கூட்டரின் போட்டியாளர்கள் டிவிஎஸ் ஜூபிடர், ஆக்டிவா மற்றும் டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 ஆகும்.

2024 Hero Pleasure+
என்ஜின் (CC)110.9 cc
குதிரைத்திறன் (bhp@rpm)8 bhp @ 7000 rpm
டார்க் (Nm@rpm)8.70 Nm @ 5550 rpm
கியர்பாக்ஸ்CVT
மைலேஜ்49 Kmpl

2024 ஹீரோ பிளெஷர்+ 110 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை ₹ 82,856 முதல் ₹ 98,982 ஆகும். வேரியண்ட் வாரியன பட்டியல்

2024 Hero Xoom 110

ஸ்போர்ட்டிவ் ஸ்கூட்டர் சந்தையில் வெளியிடப்பட்டுள்ள ஜூம் 110 ஸ்கூட்டர் மாடலில் மிக நேர்த்தான எல்இடி ஹெட்லைட் உடன் கார்னரிங் விளக்குகளை பெற்றுள்ளது. டிரம் மற்றும் டிஸ்க் பிரேக் என இரு விதமான ஆப்ஷனை பெற்று  டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெற்று பல்வேறு கனெக்ட்டிவிட்டி அம்சங்களை கொண்டுள்ளது.

ஹீரோ ஜூம் மாடலுக்கு டியோ ஸ்கூட்டருக்கு சவாலாக உள்ள நிலையில் மற்ற 110cc போட்டியாளர்களும் உள்ளனர். இந்த மாடலின் விலை ரூ.77,070 முதல் ரூ.85,528 (எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு) ஆகும்

2024 Hero Xoom
என்ஜின் (CC)110.9 cc
குதிரைத்திறன் (bhp@rpm)8 bhp @ 7250 rpm
டார்க் (Nm@rpm)8.70 Nm @ 5750 rpm
கியர்பாக்ஸ்CVT
மைலேஜ்48 Kmpl

2023 ஹீரோ ஜூம் 110 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை ₹ 91,456 முதல் ₹ 1,06,578 வரை உள்ளது. வேரியண்ட் வாரியான விலை

2024 Hero Destini 125 XTECH

சற்று மாறுபட்ட ஸ்டைலிஷ் அமைப்பினை கொண்டுள்ள ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டரில் டிரம் மற்றும் டிஸ்க் பிரேக் என இரு விதமாக பெற்று Xtech கனெக்கட்டிவிட்டி சார்ந்த நுட்பத்தைகொண்டுள்ளது.

இந்த மாடலுக்கு போட்டியாக 125cc சந்தையில் உள்ள போட்டியாளராக டிவிஎஸ் என்டார்க் 125, சுசூகி அவெனிஸ், சுசூகி பர்க்மேன் ஸ்டீரிட், யமஹா ரே ZR, மற்றும் கிரேஸியா 125 ஆகியவற்றை உள்ளது. இதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.83,498 முதல் ரூ.87,798 வரை உள்ளது.

2024 Hero Destini 125
என்ஜின் (CC)124.6 cc
குதிரைத்திறன் (bhp@rpm)9 bhp @ 7000 rpm
டார்க் (Nm@rpm)10.4 Nm @ 5550 rpm
கியர்பாக்ஸ்CVT
மைலேஜ்49 Kmpl

2023 ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டரின் தமிழ்நாட்டின் மாவட்டங்களின் ஆன்-ரோடு விலை ₹ 1,01,789 முதல் ₹ 1,08,978 வரை உள்ளது.

2024 Hero Destini Prime

இந்தியாவின் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கின்ற 125சிசி மாடலாக விளங்கும் டெஸ்டினி பிரைம் 125 ஸ்கூட்டரில் 9 bhp பவரை வழங்குகின்ற 125சிசி என்ஜின் பொருத்தப்பட்டு ஒற்றை வேரியண்டில், சில்வர், சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கின்றது.

இந்த மாடலுக்கு போட்டியாக 125cc சந்தையில் உள்ள போட்டியாளராக டிவிஎஸ் ஜூபிடர் 125, சுசூகி அக்செஸ், யமஹா ஃபேசினோ, மற்றும் ஆக்டிவா 125 ஆகியவற்றை உள்ளது. இதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.78,448 ஆகும்.

2024 Hero Destini Prime
என்ஜின் (CC)124.6 cc
குதிரைத்திறன் (bhp@rpm)9 bhp @ 7000 rpm
டார்க் (Nm@rpm)10.4 Nm @ 5550 rpm
கியர்பாக்ஸ்CVT
மைலேஜ்50 Kmpl

2024 ஹீரோ டெஸ்ட்டினி பிரைம் ஸ்கூட்டரின் தமிழ்நாட்டின் மாவட்டங்களின் ஆன்-ரோடு விலை ₹ 98,543 வரை உள்ளது.

முன்பாக ஹீரோ விற்பனை செய்து வந்த மேஸ்ட்ரோ எட்ஜ் 125 மற்றும் 110 ஸ்கூட்டர்கள் சந்தையிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. புதிதாக இந்நிறுவனம் ஜூம் 125 மற்றும் ஜூம் 160 மேக்ஸி ஸ்டைல் ஸ்கூட்டரையும் வெளியிட உள்ளது.

கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஆன்-ரோடு விலை பட்டியலும் தமிழ்நாட்டின் தோராயமானதாகும்.. எனவே விலை விபரம் டீலர்களுக்கு டீலர் மாறுபடும்.. துல்லியமான விலையை அறிய டீலரை அனுகுங்கள். கூடுதல் ஆக்செரிஸ் இணைக்கும் பொழுது விலை மாறுபடும்.

price updated – 16-04-2024

Exit mobile version