நாட்டின் முதன்மையான இருசக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்கூட்டர் மாடல்களின் என்ஜின், சிறப்பம்சங்கள், மைலேஜ் மற்றும் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை பட்டியல் என அனைத்தும் அறிந்து கொள்ளலாம்.

ஹீரோ நிறுவனம் 110cc சந்தையில் மேஸ்ட்ரோ எட்ஜ், பிளெஷர் பிளஸ் எக்ஸ்டெக், ஜூம் 110 , மற்றும் 125cc சந்தையில் டெஸ்ட்டினி 125 மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஆகிய 5 மாடல்கள் விற்பனை செய்ய உள்ளது.

2023 Hero Mastero Edge 110

ஸ்டைலிஷான மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டரில் 110cc என்ஜின் xens நுட்பத்துடன் பொருத்தப்பட்டு மிக நேர்த்தியான பாடி கிராபிக்ஸ் கொடுக்கப்பட்டு 7 விதமான மாறுபட்ட நிறங்களை பெற்று செமி அனலாக் முறையிலான கிளஸ்ட்டரை கொண்டுள்ளது.

டிரம் பிரேக் மற்றும் டிஸ்க் ஆப்ஷனில் கிடைக்கின்ற பெரும்பாலும் டிரம் பிரேக் மட்டும் கிடைக்கின்றது. இந்த ஸ்கூட்டரின் விலை ரூ. 71,816 ஆகும்.

மேஸ்ட்ரோ எட்ஜ் 110 ஸ்கூட்டரின் போட்டியாளர்கள் டிவிஎஸ் ஜூபிடர், ஹீரோ பிளெஷர் பிளஸ், ஆக்டிவா 6G மற்றும் டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 ஆகும்.

2023 Hero Mastero Edge 110
என்ஜின் (CC) 110.9 cc
குதிரைத்திறன் (bhp@rpm) 8 bhp @ 7250 rpm
டார்க் (Nm@rpm) 8.70 Nm @ 5750 rpm
கியர்பாக்ஸ் CVT
மைலேஜ் 48 Kmpl

2023 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 110 ஸ்கூட்டரின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை ₹ 87,985 முதல் ₹ 94,878 ஆகும்.

2023 Hero Pleasure+ XTECH

ஹீரோ நிறுவனத்தின் மற்றொரு 110cc ஸ்கூட்டர் மாடலான பிளெஷர் பிளஸ் 110 மாடலில் கனெக்ட்டிவிட்டி சார்ந்த Xtech அம்சத்தை கொண்டுள்ளது. இரு பக்க டயர்களிலும் 130 மிமீ டிரம் பிரேக் பெற்றதாக உள்ளது.

ஹீரோ பிளெஷர் பிளஸ் மாடல் விலை ₹ 71,952 முதல் ₹ 83,492 (எக்ஸ்ஷோரூம்). பிளெஷர் பிளஸ் ஸ்கூட்டரின் போட்டியாளர்கள் டிவிஎஸ் ஜூபிடர், ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ், ஆக்டிவா 6G மற்றும் டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 ஆகும்.

2023 Hero Pleasure+
என்ஜின் (CC) 110.9 cc
குதிரைத்திறன் (bhp@rpm) 8 bhp @ 7000 rpm
டார்க் (Nm@rpm) 8.70 Nm @ 5550 rpm
கியர்பாக்ஸ் CVT
மைலேஜ் 49 Kmpl

2023 ஹீரோ பிளெஷர்+ 110 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை ₹ 85,450 முதல் ₹ 96,490 ஆகும்.

2023 Hero Xoom 110

ஸ்போர்ட்டிவ் ஸ்கூட்டர் சந்தையில் வெளியிடப்பட்டுள்ள ஜூம் 110 ஸ்கூட்டர் மாடலில் மிக நேர்த்தான எல்இடி ஹெட்லைட் உடன் கார்னரிங் விளக்குகளை பெற்றுள்ளது. டிரம் மற்றும் டிஸ்க் பிரேக் என இரு விதமான ஆப்ஷனை பெற்று  டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெற்று பல்வேறு கனெக்ட்டிவிட்டி அம்சங்களை கொண்டுள்ளது.

ஹீரோ ஜூம் மாடலுக்கு டியோ ஸ்கூட்டருக்கு சவாலாக உள்ள நிலையில் மற்ற 110cc போட்டியாளர்களும் உள்ளனர்.

2023 Hero Xoom
என்ஜின் (CC) 110.9 cc
குதிரைத்திறன் (bhp@rpm) 8 bhp @ 7250 rpm
டார்க் (Nm@rpm) 8.70 Nm @ 5750 rpm
கியர்பாக்ஸ் CVT
மைலேஜ் 48 Kmpl

2023 ஹீரோ ஜூம் 110 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை ₹ 91,456 முதல் ₹ 1,01,878 வரை உள்ளது.

2023 Hero Mastero Edge 125

மேஸ்ட்ரோ எட்ஜ் 110 ஸ்கூட்டரின் அடிப்படையில் ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 மாடலில் பல்வேறு மாறுபட்ட நிறங்கள் முழுமையான டிஜிட்டல் கிளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு Xtech நுட்பத்துடன் டிரம் மற்றும் டிஸ்க் என இருவிதமான ஆப்ஷனை பெற்றதாக அமைந்துள்ளது. இதன் விலை ₹ 85,236 முதல் ₹ 90,226 ஆகும்.

இந்த பிரிவில் போட்டியாக ஹோண்டா ஆக்டிவா 125, சுசூகி ஆக்செஸ் 125, யமஹா ஃபேசினோ, டிவிஎஸ் ஜூபிடர் 125, ஹீரோ டெஸ்ட்டினி 125 போன்றவை விற்பனையில் உள்ளது.

2023 Hero Mastero Edge 125
என்ஜின் (CC) 124.6 cc
குதிரைத்திறன் (bhp@rpm) 9 bhp @ 7000 rpm
டார்க் (Nm@rpm) 10.4 Nm @ 5550 rpm
கியர்பாக்ஸ் CVT
மைலேஜ் 45 Kmpl

2023 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரின் தமிழ்நாட்டின் மாவட்டங்களின் ஆன்-ரோடு விலை ₹ 1,04,789 முதல் ₹ 1,11,678 வரை உள்ளது.

2023 Hero Destini 125 XTECH

சற்று மாறுபட்ட ஸ்டைலிஷ் அமைப்பினை கொண்டுள்ள ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டரில் டிரம் மற்றும் டிஸ்க் பிரேக் என இரு விதமாக பெற்று Xtech கனெக்கட்டிவிட்டி சார்ந்த நுட்பத்தைகொண்டுள்ளது.

இந்த மாடலுக்கு போட்டியாக 125cc சந்தையில் உள்ள போட்டியாளராக டிவிஎஸ் என்டார்க் 125, சுசூகி அவெனிஸ், சுசூகி பர்க்மேன் ஸ்டீரிட், யமஹா ரே ZR, மற்றும் கிரேஸியா 125 ஆகியவற்றை உள்ளது.

2023 Hero Destini 125
என்ஜின் (CC) 124.6 cc
குதிரைத்திறன் (bhp@rpm) 9 bhp @ 7000 rpm
டார்க் (Nm@rpm) 10.4 Nm @ 5550 rpm
கியர்பாக்ஸ் CVT
மைலேஜ் 45 Kmpl

2023 ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டரின் தமிழ்நாட்டின் மாவட்டங்களின் ஆன்-ரோடு விலை ₹ 1,01,789 முதல் ₹ 1,06,978 வரை உள்ளது.

கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஆன்-ரோடு விலை பட்டியலும் தமிழ்நாட்டின் தோராயமானதாகும்.. எனவே விலை விபரம் டீலர்களுக்கு டீலர் மாறுபடும்.. துல்லியமான விலையை அறிய டீலரை அனுகுங்கள். கூடுதல் ஆக்செரிஸ் இணைக்கும் பொழுது விலை மாறுபடும்.