2022 ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் XTec விற்பனைக்கு வந்தது

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக்கில் XTec எனப்படுகின்ற ப்ளூடூத் கனெக்டிவிட்டி ஆப்ஷன் கொண்ட மாடலாக விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

ஹீரோ அதே 97.2 சிசி ஏர்-கூல்டு எஞ்சினைத் தக்கவைத்துக் கொண்டு 7.9 பிஎச்பி பவர் மற்றும் 8.05 என்எம் டார்க் உடன் i3s தொழில்நுட்பமும் சிறந்த சிக்கனத்திற்காக வைக்கப்பட்டுள்ளது.

ப்ளூடூத் இணைப்பு, அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் எச்சரிக்கை, நிகழ்நேர மைலேஜ் அறியும் வசதி, USB சார்ஜிங் போர்ட் மற்றும் சைட் ஸ்டேன்ட் உள்ள சமயத்தில் எஞ்சின் கட் ஆஃப் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.முழுமையான டிஜிட்டல் கன்சோலை ஸ்பிளெண்டர் ப்ளஸ் கொண்டுள்ளது.

மற்றபடி எந்த மாற்றமும் இல்லாமல் சஸ்பென்ஷன் அமைப்பு மற்றும் பிரேக்கிங் அம்சத்தை பெறுகின்றது ஸ்பார்க்லிங் பீட்டா ப்ளூ, கேன்வாஸ் பிளாக், டொர்னாடோ கிரே மற்றும் பேர்ல் ஒயிட் ஆகிய நான்கு பெயிண்ட் திட்டங்களில் ஸ்பிளெண்டர் ப்ளஸ் Xtec மாடலை ஹீரோ வழங்குகிறது

ஒட்டுமொத்தமாக, Hero Splendor Plus இப்போது நான்கு வகைகளில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.69,380 முதல் ரூ.72,900 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) வரை அமைந்துள்ளது.

Share