சென்னையில் Vida V1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எலக்ட்ரிக் பிராண்டாக வந்துள்ள Vida பிராண்டின் V1 புரோ மற்றும் V1 பிளஸ் என இரண்டு வேரியண்டுகளை அறிமுகம் செய்துள்ளது. முதற்கட்டமாக மூன்று நகரங்களில் விற்பனைக்கு கிடைத்து வந்த வீடா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சென்னை, ஹைதராபாத், புனே, நாக்பூர், மற்றும் நாசிக் உள்ளிட்ட நகரங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Vida V1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

வீடா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் V1 பிளஸ் மாடல் 3.44kWh பேட்டரியைப் பெற்று அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் 85 கிமீ ரேஞ்ச் வழங்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்தப்படியாக, V1 Pro மாடல் சற்று பெரிய 3.94kWh பேட்டரியைப் பெற்றுள்ளது. இதன் ரேஞ்சு 95 கிமீ வரை கிடைக்கும்.

இரண்டு வகைகளும் ஒரே மின்சார மோட்டாரைப் பெறுகின்றது. பொதுவாக இரு மாடல்களும் 0-80 சதவீத சார்ஜிங் செய்ய 65 நிமிடங்களை எடுத்துக் கொள்ளும்.

Vida Escooter Vida V1 Plus Vida V1 Pro
Price ₹1,45,000.00 ₹1,59,000.00
Range 85 km 95 km
அதிகபட்ச வேகம் 80km/h 80km/h
Accelration 0-40 km/h in 3.4 seconds 0-40 km/h in 3.2 seconds
சார்ஜிங் நேரம் 0-80% charge in 65 minutes 0-80% charge in 65 minutes
பேட்டரி திறன் 3.44kWh battery 3.94 kWh battery

இங்கே கொடுக்கப்பட்டுள்ள விலை எக்ஸ்ஷோரூம் பெங்களூரு.

தமிழ்நாட்டில் முதன்முறையாக சென்னையில் உள்ள வேளச்சேரி வால்டாக்ஸ் சாலையில் உள்ள மோகனா ஆட்டோமொபைல்ஸ் ஷோரூமில் விற்பனைக்கு வீடா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கிடைக்க துவங்கியுள்ளது. இந்த ஸ்கூட்டருக்கான முன்பதிவு vida வலைதளத்தில் ரூ.499 கட்டணமாக செலுத்தி மேற்கொள்ளலாம்.

Share