ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விடா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.6,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் விடா V1 பிளஸ் வேரியண்ட் நீக்கப்பட்டுள்ளது.
வீடா ஸ்கூட்டர் மாடல் பேட்டரி ஸ்வாப் நுட்பத்துடன் ஈக்கோ, ரைட், ஸ்போர்ட் மற்றும் கஸ்டம் என நான்கு விதமான ரைடிங் மோட் கொண்டதாக அமைந்துள்ளது.
மிக நேர்த்தியான ஸ்கூட்டர் தோற்ற அமைப்பினை பெற்ற வீடா வி1 மாடல் ஆக்ரோஷமாக தோற்றமளிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டு எல்இடி ஹெட்லேம்ப், அகலமான ஃப்ளைஸ்கிரீன், ஸ்வாப்பிங் பாடி பேனல் மற்றும் இரு பிரிவு பெற்ற இருக்கை வடிவமைப்பை கொண்டுள்ளது.
விடா ஸ்கூட்டரின் பிரீமியம் தோற்ற வசதிகளுடன் 7-இன்ச் டச்ஸ்கிரீன் TFT டிஸ்ப்ளே கொண்டுள்ளது. V1 ப்ரோவில் 3.94kWh பேட்டரி பெற்றுள்ளது.
Vida Specification | V1 Pro |
Battery pack | 3.94 kWh |
Top Speed | 80 Km/h |
Range (IDC claimed) | 165 km |
Real Driving Range | 110 km |
Riding modes | Sport, Ride, Eco, Custom |
2023 ஹீரோ விடா V1 புரோ – ₹ 1,45,900 (எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு)
This post was last modified on June 2, 2023 3:33 PM