• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ஹீரோ விடா VX2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் படங்கள் மற்றும் முக்கிய விபரம் வெளியானது

by MR.Durai
25 May 2025, 7:56 am
in Bike News
0
ShareTweetSend

Hero Vida VX2 plus E scooter

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விடா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்டின் Z கான்செப்ட் அடிப்படையிலான விடா VX2 வரிசை ஸ்கூட்டரின் ரேஞ்சு 95 கிமீ முதல் 200 கிமீ வரையில் வெளிப்படுத்தும் வகையில் 2.2kwh முதல் 4.4kwh வரை பேட்டரி ஆப்ஷனை பெற்றிருக்கலாம்.

தற்பொழுது சந்தையில் உள்ள விடா வி2 ஸ்கூட்டரில் 2.2kwh, 3.44kwh, மற்றும் 3.97 kwh என மூன்று பேட்டரி ஆப்ஷன் உள்ள நிலையில் வரவுள்ள விஎக்ஸ்2 ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட் 4.4kwh பேட்டரி பெறக்கூடும். இந்த மாடல் இந்தியா மட்டுமல்லாமல் ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.

நமக்கு கிடைத்துள்ள படத்தில் ஏற்கனவே சந்தையில் உள்ள வி2 மாடலின் சில முக்கிய அம்சங்களை பகிர்ந்து கொண்டாலும் குடும்பங்களுக்கு ஏற்ற வகையிலான டிசைனை வெளிப்படுத்துகின்ற விஎக்ஸ்2 பிளஸ், விஎக்ஸ்2 புரோ மற்றும் விஎக்ஸ்2 கோ ஆகியவற்றில் பொதவாக முன்பக்கத்தில்  டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் சிங்கிள் ஷாக் சஸ்பென்ஷன் பின்புறத்தில் கொடுக்கப்பட்டு, 12 அங்குல அலாய் வீல் பெற்று முன்புறத்தில் டிஸ்க் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக்குடன் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டத்தை பெற்றிருக்கும்.

முன்பக்கத்தில்  90/90-12 மற்றும் பின்புறத்தில் 90/100-12 டயரை பெறுகின்ற விடா விஎக்ஸ்2 பிளஸ் மாடலில் 7 அங்குல TFT டிஜிட்டல் கிளஸ்ட்டரை பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன் கூடுதலாக OTA மேம்பாடு, க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்களை பெறக்கூடும்

ஜூலை 1 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ள விடா விஎக்ஸ்2 ஆரம்ப விலை ரூ.75,000 முதல் துவங்கி டாப் வேரியண்ட் ரூ.1.60 லட்சத்தில் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Tags: Hero Vida VX2Hero Vida VX2 Plus
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிய ஹீரோ டெஸ்டினி 125யின் 3,000 கிமீ பயண அனுபவத்தில் மைலேஜ் மற்றும் முதல் சர்வீஸ் கட்டண விபரம்!

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

பஜாஜ் பல்சர் N160 S மற்றும் N160 SS அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்!

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version