₹ 68,599 விலையில் ஹீரோ ஜூம் 110 ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிய ஹீரோ ஜூம் 110 ஸ்கூட்டர் மாடலை மிக ஸ்டைலிஷாக இளைய தலைமுறையினரை கவரும் வகையில் விற்பனைக்கு ரூ. 68,599 முதல் ரூ. 76,699 வரை விலை நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

சூம் ஸ்கூட்டர் LX, VX மற்றும் ZX மூன்று வகைகளில் கிடைக்கிறது. முன்பதிவு, பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் துவங்கப்பட உள்ளது.

Hero Xoom 110

ஹீரோ Xoom ஸ்கூட்டர் மிகவும் ஸ்டைலிஷான நவீனத்துவ டிசைன் மொழியை பின்பற்றி உருவாக்கப்பட்டு புதிய H-வடிவ எல்இடி ரன்னிங் விளக்குகளுடன் எல்இடி ஹெட்லைட் மற்றும் X வடிவ டெயில்லேம்ப்களுடன் தோற்றத்தில் மிக ஸ்டைலாக உள்ளது. முதல் முறையாக ஜூம் 110 ஸ்கூட்டர் மாடலில் சிறப்பு அம்சமாக கார்னரிங் விளக்குகளையும் பெறுகிறது. ஆரஞ்சு, கருப்பு, சிவப்பு, நீலம் மற்றும் வெள்ளை நிறங்களில் வந்துள்ளது

டாப் வேரியண்டில் 12-இன்ச் அலாய் வீல்கள் இடம்பெற்றுள்ளன. இதன் வீல்பேஸ் 1300 மிமீ மற்றும் 1843 மிமீ நீளம், 717 மிமீ அகலம் மற்றும் 1188 மிமீ உயரம் கொண்டுள்ளது. ZX மாறுபாடு 731 மிமீ சற்று கூடுதல் அகலம் கொண்டுள்ளது.

ZX மற்றும் VX மாடல்களுக்கு புளூடூத் இணைப்புடன் எல்சிடி டிஸ்பிளே பெறுகிறது. அதே நேரத்தில் LX வேரியண்டில் டிஜிட்டல் அனலாக் அமைப்பு, கார்னரிங் விளக்குகள், USB சார்ஜர் மற்றும் பலவற்றைப் பெறுகிறது. பிரேக்கிங் அமைப்பில் முன்புறத்தில் டிஸ்க் பிரேக் மற்றும் பின்புற டிரம் அமைப்பைக் கொண்டிருக்கிறது.

டாப்-ஸ்பெக் ZX மாறுபாடு மட்டுமே 190மிமீ முன் டிஸ்க் பிரேக்கை கொண்டுள்ளது. மற்ற இரண்டும் முன்புறத்தில் 130மிமீ டிரம் பிரேக்குடன் பின்புறத்தில், அனைத்து வகைகளிலும் 130மிமீ டிரம் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.

ஜூம் 110 மாடலில் டெலஸ்கோபிக் முன் ஃபோர்க்குகள் மற்றும் ஒற்றை பின்புற ஸ்பிரிங் ஷாக் அப்சார்பர் பெறுகிறது. பின்புறம் 90/90 முன் மற்றும் 90/80 (VX மற்றும் ZXக்கு 100/90) 12-இன்ச் அலாய்களில் பொருத்தப்பட்டுள்ளது. இது 5-2 லிட்டர் எரிபொருள் டேங்க் பெற்று 109 கிலோ எடை கொண்டது.

மேஸ்ட்ரோ ஸ்கூட்டரை இயக்கும் அதே 110 சிசி சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் மூலம் ஹீரோ ஜூம் 110 ஸ்கூட்டர் இயக்கப்படுகிறது. இந்த என்ஜின் 7250 ஆர்பிஎம்மில் 8 பிஎச்பி பவர், 5750 ஆர்பிஎம்மில் 8.7 என்எம் டார்க் வெளிப்படுத்தும். இந்த ஸ்கூட்டர் i3s இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் செயல்பாடு மற்றும் USB சார்ஜிங் போர்ட் ஆகியவற்றையும் பெறுகிறது.

Hero Xoom 110 Price

Variant Price
LX Rs.68,599
VX Rs.71,799
ZX Rs.76,699
Exit mobile version