Automobile Tamilan

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4V டக்கார் எடிசன் அறிமுகமானது..! நாளை முதல் முன்பதிவு ஆரம்பம்.!

hero xpulse 2004v dakar edition

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய டக்கார் ரேலி வெற்றியை கொண்டாடும் வகையில் எக்ஸ்பல்ஸ் 200 4V புரோ வேரியண்டின் அடிப்படையில் டக்கார் எடிசன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் நாளை முன்பதிவு துவங்கப்பட்டு டெலிவரி விரைவில் துவங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டக்கார் எடிசன் அறிமுகத்தை பற்றி நாம் முதன்முறையாக முன்பே செய்தி வெளியிட்டிருந்த நிலையில் தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டு டிசம்பர் 18, 2024 முதல் முன்பதிவு துவங்கப்பட உள்ள ஒற்றை கோல்டுஃபிஷ் சில்வர் நிறத்தில் Dakar Edition பேட்ஜ், ஸ்டிக்கரிங், பாடி கிராபிக்ஸ் என அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது.

அடிப்படையில் சந்தையில் 200 4V புரோ வேரியண்டினை தழுவியதாகவே அமைந்துள்ளது.  ஆயில் கூல்டு 199.6cc கொண்ட 4 வால்வுகளை கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு அதிகபட்சமாக 18.8 bhp பவர் 8,500rpm-ல், 17.35 Nm டார்க் 6,500rpm-லும் வழங்குகின்றது. இந்த பைக்கில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது. முன்புறத்தில் 276 mm டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 220 mm டிஸ்க் பிரேக்குகளுடன், சிங்கிள் சேனல் ஆன்டி-லாக்கிங் பிரேக்கிங் சிஸ்டத்துடன், 13 லிட்டர் எரிபொருள் கொள்ளளவு டேங்க் கொண்டுள்ளது.

எக்ஸ்பல்ஸ் 200 4V டக்கார் பைக்கில் ரோடு, ஆஃப் ரோடு மற்றும் ரேலி என மூன்று விதமான ரைடிங் மோடுகளை பெற்ற சிங்கிள சேனல் ஏபிஎஸ் கொண்டு வந்துள்ளது. சஸ்பென்ஷன் அமைப்பில் 37mm டெலஸ்கோபிக் ஃபோர்க் 250 மிமீ பயணிப்பதுடன் மற்றும் 10 ஸ்டெப்களில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் சஸ்பென்ஷன் கொண்டுள்ளது.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4V Dakar Edition விலை ரூ.1.68 லட்சத்தில் துவங்கலாம். எக்ஸ்பல்ஸ் 210 மாடல் ஜனவரி 2025ல் விற்பனைக்கு வரக்கூடும்.

Exit mobile version