ரூ.94,000 விலையில் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200, எக்ஸ்பல்ஸ் 200T அறிமுகமானது

0be4b hero xpulse 200 bike

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ள புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக் ( Hero XPulse 200) மாடல் ரூ.97,000 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆஃப் ரோடு மற்றும் ஆன் ரோடு என இரு பயன்களை வழங்கும் இரு சக்கர வாகனமாக விளங்குகின்றது.

எக்ஸ்ட்ரீம் 200ஆர் அடிப்படையில் ஃபேரிங் செய்யப்பட்ட எக்ஸ்ட்ரீம் 200எஸ் (Hero xtreme 200S) பைக் விற்பனைக்கு வெளியாகியுள்ளது.

இந்திய சந்தையில் கிடைக்கின்ற ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மற்றும் பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் போன்ற அட்வென்ச்சர் ரக மாடலை விட குறைவான விலையில் பலதரப்பட்ட மக்களின் விருப்பமான மாடலாக எக்ஸ்பல்ஸ் விளங்க உள்ளது. இந்த வரிசையில் நீண்ட தொலைவு பயணத்துக்கு ஏற்ற டூரிங் ரக எக்ஸ்பல்ஸ் 200டி பைக்கும் கிடைக்கின்றது.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200

இந்திய சந்தையில் வெளியிடப்பட்டுள்ள Hero XPulse 200 பைக் மாடலானது, இந்நிறுவனத்தின் ஸ்போர்ட்டிவ் ரக பட்ஜெட் மாடலான எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்கினை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டதாகும். குறிப்பாக என்ஜின் உட்பட பெரும்பாலான பாகங்களை இந்த பைக்கிலிருந்து பகிர்ந்து கொண்டுள்ளது.

ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் கொண்டிருக்கின்ற 200சிசி என்ஜின் பெற்ற இந்த மாடல் அதிகபட்சமாக 18.4 ஹெச்பி பவர் மற்றும்  17.1 Nm டார்க் திறனை கொண்டதாக விளங்குகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கின்றது. எக்ஸ்பல்ஸ் 200-ல் கார்புரேட்டர் கிடைக்கின்றது. ஆனால் எக்ஸ்பல்ஸ் 200டி பைக்கில் கார்புரேட்டர் மட்டும் பொருத்தப்பட்டுள்ளது.

எக்ஸ்பல்ஸ் 200 டிசைன்

மிக நேர்த்தியான ஸ்டிக்கிரிங் மற்றும் பாடி கிராபிக்ஸ் வழங்கப்பட்டுள்ள இந்த பைக்கில், மேல் எழும்பிய முன்புற மட்கார்டு, என்ஜின் கார்டு, சம்ப் கார்டு, மேல் நோக்கிய சைலன்சர் போன்றவை முழுமையான ஆஃப்ரோடு சந்தைக்கான மாடலாக எக்ஸ்பல்ஸ் 200 பைக்கினை நிலை நிறுத்துகின்றது.

எக்ஸ்பல்ஸ் 200டி இந்த பைக் ஒரு டூரிங் ரக மாடலாக மிக நேர்த்தியான இருக்கை அமைப்பு நீண்ட தொலைவு பயணங்களுக்கு ஏற்றதாக அமைந்துள்ளது. இந்த மாடலில் சைலன்சர், மட்கார்டு போன்றவை சாதாரனமாக அமைந்துள்ளது.

190 மிமீ பயணிக்கும் டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷன் , பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ள மோனோஷாக் அப்சார்பர் அதிகபட்சமாக 170 மிமீ வரை பயணிக்கும், இந்த பைக்கின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 200 மிமீ கொண்டிருப்பதுடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ், எல்இடி ஹைட்லைட், ப்ளூடூத் ஆதரவை பெற்ற கிளஸ்ட்டர் கொண்டதாக இருக்கலாம்.

எக்ஸ்பல்ஸ் சிறப்புகள்

ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற வகையில் 21 அங்குல முன்புற வீல், 18 அங்குல பின்புற வீல் கொண்டுள்ள இந்த மாடலில், எல்இடி ஹெட்லைட், டெயில் லைட், எல்இடி டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்ட்டர் கொண்டதாக உள்ளது. இந்த கிளஸ்ட்டரில் டிரிப் மீட்டர், ஒடோமீட்டர், ஸ்பீடோ மீட்டர் உட்பட ப்ளூடுத் வாயிலாக இணைக்கும் ஆதரவை வழங்கியுள்ளது.

எக்ஸ்பல்ஸ் 200டி பைக்கில் இருபுறமும் 17 அங்குல வீல் பொருத்தப்பட்டுள்ளது.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200, எக்ஸ்பல்ஸ் 200T விலை

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 – ரூ.97,000

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 FI – ரூ.97,000

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200T – ரூ.94,000

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் – ரூ.98,500

(டெல்லி எக்ஸ்-ஷோரூம்)

Hero Xpulse 200 & Xpulse 200T image gallery

 

Exit mobile version