இந்தியாவின் முதன்மையான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், 200சிசி மற்றும் ஸ்கூட்டர் சார்ந்த சந்தையில் புதிய மாடல்களை அறிமுகம் செய்து வரும் நிலையில் குறைந்த விலை அட்வென்ச்சர் மாடலாக 200சிசி எஞ்சின் பெற்ற ஹீரோ எக்ஸ்பல்ஸ் பைக்கினை விற்பனைக்கு வெளியிட திட்டமிட்டுள்ளது.
சமீபத்தில் ஹீரோ விற்பனைக்கு அறிமுகம் செய்திருந்த எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்கை தொடர்ந்து, EICMA 2018 அரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட டூரர் ரக எக்ஸ்பல்ஸ் 200T மற்றும் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட எக்ஸ்பல்ஸ் 200 ஆகிய இரு மாடல்களையும், வரும் 2019 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், அதாவது ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் உறுதியாக விற்பனைக்கு வெளியிட உள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது.
முதன்முறையாக 2017 EICMA மோட்டார் வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த அட்வெனச்சர் ரக மோட்டார்சைக்கிளில் எகஸ்ட்ரீம் 200 மாடலில் இடம்பெற உள்ள அதே எஞ்சின் அதிகபட்சமாக 18 பிஹெச்பி ஆற்றல் மற்றும் 17 என்எம் டார்க் வழங்கும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.
மேலும் இந்த மோட்டார்சைக்கிள் ஏபிஎஸ் ஆப்ஷனாலாக உள்ள மாடலும் ரூ.1 லட்சத்தக்கு குறைந்த விலையை கொண்டிருக்கும் என்பதனால் நிச்சியமாக சந்தையில் மிகுந்த வரவேற்பினை பெற வாய்ப்பபுகள் உள்ளது.
ஹீரோவின் மிகவும் ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் ஜூம் 125R சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அடுத்த சில வாரங்களுக்குள்…
எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்துடன் கூட்டணி அமைத்த பிறகு முதல் மாடலாக வின்ட்சர் இவி ரூ.9.99…
125சிசி சந்தையில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய டெஸ்டினி 125 ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திற்கு மிகப்பெரிய ஒரு விற்பனை எண்ணிக்கை…
இந்தியாவில் BYD நிறுவனம் தனது இ6 மாடலை புதிய இமேக்ஸ் 7 என்ற பெயரில் விற்பனைக்கு அக்டோபர் முதல் வாரத்தில்…
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் முதல் ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு மார்ச் 2025ல் வெளியாகும் என…
நாட்டின் முதன்மையான பயணிகள் வாகன தயாரிப்பாளரான மாருதி சுசுகி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் மாடலை அடுத்த சில மாதங்களுக்குள்…