ஹீரோவின் எக்ஸ்ட்ரீம் 125R பைக்கில் டூயல் சேனல் ஏபிஎஸ், க்ரூஸ் கண்ட்ரோல் அறிமுகமானது

hero xtreme 125r dual channel abs red

கிளாமர் எக்ஸ் மாடலை தொடர்ந்து இரண்டாவது 125cc மாடலில் ஹீரோ நிறுவனம் எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக்கில் க்ரூஸ் கண்ட்ரோல் பெற்றிருப்பதுடன் முதன்முறையாக இந்த பிரிவில் டூயல் சேனல் ஏபிஎஸ் கொண்ட மாடல் என்ற பெருமையை பெற்றுள்ளது.

முதலில் இந்தியாவின் 125cc பைக் பிரிவில் ஏபிஎஸ் கொண்டு வந்த ஹீரோ தற்பொழுது மற்றொரு மிக முக்கியமான பாதுகாப்பு சார்ந்த மேம்பாடாக டூயல் சேனல் ஏபிஎஸ் கொடுத்திருக்கின்றது, கூடுதலாக உள்ள ரைட் பை வயருடன் க்ரூஸ் கண்ட்ரோல் கொடுத்திருப்பதுடன் நீண்ட தொலைவு பயணிக்கும் ஹைவே ரைடர்களுக்கு மிகவும் வரவேற்க வேண்டிய ஒன்றாகும்.

மற்றபடி, கிளாமர் எக்ஸ் போல இந்த மாடலில் புதிய எல்சிடி கிளஸ்டர் வழங்கப்பட்டு, பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களுடன் புதிதாக கருப்பு நிறத்துடன் சிவப்பு, கருப்பு நிறத்துடன் பச்சை மற்றும் கருப்பு நிறத்துடன் கிரே என மூன்று நிறங்கள் மிகவும் கவர்ச்சிகரமாக அமைந்துள்ளது.

பவர், ரோடு மற்றும் ஈக்கோ என மூன்று ரைடிங் மோடு பெற்று எக்ஸ்ட்ரீம் 125R பைக்கில் 11.5hp மற்றும் 10.5Nm டார்க்கை வழங்கும், அதே 124.7cc சிங்கிள்-சிலிண்டர் ஏர்-கூல்டு எஞ்சினுடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

வழக்கமான மாடலை விட இந்த டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் க்ரூஸ் கண்ட்ரோல் வேரியண்ட் விலை ரூ. 10,500 வரை கூடுதலாக அமைந்துள்ளது.

(Ex-showroom)

Exit mobile version