Automobile Tamilan

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 4V பைக்கின் விலை மற்றும் சிறப்புகள்

hero xtreme 160r 4v launched

4 வால்வுகளை பெற்று கோல்டன் நிறத்திலான யூஎஸ்டி ஃபோர்க் பெற்ற ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 4V பைக்கின் ஆரம்ப விலை ₹ 1,27,300  முதல் 1,36,500 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எக்ஸ்ட்ரீம் 160R 4V பைக்கினை நேரடியாக எதிர்கொள்ள FZS-FI அப்பாச்சி RTR 160 4V மற்றும் பல்சர் NS160 பைக்குகள் உள்ளன.0-60kmph மற்றும் 0-100kmph என இரண்டிலும் மிக வேகமான மாடல் என ஹீரோ மோட்டோகார்ப் உறுதிப்படுத்தியுள்ளது.

Hero Xtreme 160R 4V

முந்தைய மாடலின் வடிவமைப்பில் சிறிய அளவிலான மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தாலும் பெருமளவில் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளது.

எக்ஸ்ட்ரீம் 160R 4V பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 165cc ஏர் ஆயில் கூல்டூ என்ஜின் அதிகபட்சமாக 16.9 hp பவர் மற்றும் 14.5 Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

சஸ்பென்ஷன் அமைப்பில் முன்புறத்தில் 37mm கோல்டன் அப் சைடு டவுன் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் 7 ஸ்டெப் அட்ஜெஸ்ட்பிள் மோனோஷாக் சஸ்பென்ஷன் உள்ளது. மற்றபடி, தொடர்ந்து டெலிஸ்கோபிக் ஃபோர்க் பெற்ற மாடலும் உள்ளது.

புரோ மற்றும் ஸ்டாண்டர்ட் என இரண்டு விதமான வேரியண்டுகளில் கிடைக்கின்றது. புரோ வேரியண்ட் மாடல் பொறுத்தவரை நமக்கு கோல்டன் யூஎஸ்டி ஃபோர்க், ஸ்பிளிட் சீட் ஆனது வழங்கப்பட்டிருக்கின்றது ஹீரோ கனெக்ட் 2.0 இடம்பெற்றிருக்கின்றது

சாதாரணமான STD வேரியண்ட் பொறுத்த வரை டெலஸ்கோப்பிக் போர்க்கு மற்றும் ஒற்றை இருக்கை வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த மாடலில் ஸ்பிளிட் சீட் ஆனது இடம் பெறவில்லை.

ஹீரோ கனெக்ட் 2.0 ஆனது இக்னிஷன் அலர்ட், பேனிக் அலெர்ட், ஓவர் ஸ்பீட் அலர்ட், திருட்டு எச்சரிக்கை, ஜியோஃபென்ஸ் எச்சரிக்கை, வாகன ஆரோக்கியம் போன்ற பல அம்சங்களைப் பெறுகிறது.

Xtreme 160R 4V double disc – ₹ 1,27,300

Xtreme 160R 4V double disc connected – ₹ 1,32,800

 Xtreme 160R 4V Pro – ₹ 1,36,500

(எக்ஸ்-ஷோரூம் இந்தியா)

Exit mobile version