Automobile Tamilan

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R ஸ்டெல்த் எடிசன் விற்பனைக்கு வந்தது

9da5d hero xtreme 160r stealth edition

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பண்டிகை காலத்தை முன்னிட்டு புதிய எக்ஸ்ட்ரீம் 160R ஸ்டெல்த் எடிசன் மாடலை விற்பனைக்கு ரூ.1,16,660 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. முன்பாக விற்பனையில் உள்ள 100 மில்லியன் எடிசனை விட ரூ.200 வரை விலை கூடுதலாக அமைந்துள்ளது.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கில் கருமை நிறத்துடன் ஸ்டைலிஷான ஸ்டிக்கரிங்க்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கூடுதலாக எல்சிடி கிளஸ்ட்டருக்கு கூடுதலான வெளிச்சத்தை பெறுவதற்கு அட்ஜெஸ்ட்மென்ட் வசதி, யூஎஸ்பி சார்ஜிங் போர்ட், கியர் பொசிஷன் இன்டிகேட்டரும் இணைந்துள்ளது.

எக்ஸ்ட்ரீம் 160 ஆர் பைக்கின் என்ஜின் மிக நேர்த்தியாக ட்யூன் செய்யப்பட்டு மிக சிறப்பான முறையில் அதிகபட்சமாக 8,500rpm-ல் 15.2 ஹெச்பி பவர் மற்றும் 6,500rpm-ல் 14 என்எம் டார்க் வெளிபடுத்தும். உள்ளது. குறிப்பாக அப்பாச்சி 160 பைக்கின் என்ஜின் ஆயில் கூல்டு பெற்றுள்ளது. இதில் 5 வேக கியர்பாக்ஸை பெற்றுள்ளது.

சிங்கிள் டிஸ்க் – ரூ. 1,11,285 லட்சம்

டூயல் டிஸ்க் – ரூ. 1,14,285 லட்சம்

ஸ்பெஷல் எடிஷன் – ரூ. 1,16,085 லட்சம்

ஸ்டெல்த் எடிசன் – ரூ.1,16,285

(எக்ஸ்ஷோரூம் இந்தியா)

Exit mobile version