ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக் போட்டியாளர்களை விட சிறந்ததா?

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160 ஆர்

ஹீரோ மோட்டோகார்ப் தனது முதல் பிரீமியம் லுக் பெற்ற மாடலாக வெளியிட்டுள்ள எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக் அடுத்த சில வாரங்களுக்குள் விற்பனைக்கு துவங்கப்பட உள்ள நிலையில், இந்த மாடலை எதிர்கொள்ள உள்ள சுசுகி ஜிக்ஸர், டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி, பல்சர் என்எஸ் 160, சிபி ஹார்னெட் 160ஆர், யமஹா FZ S, எக்ஸ்பிளேடு போன்றவற்றுடன் ஹோண்டா யூனிகார்ன் பைக்கினையும் எதிர்கொள்ள உள்ளது.

பொதுவாக 150சிசி -180சிசி வரையில் உள்ள மாடல்களை எதிர்கொள்ளும் வகையில் 163 சிசி என்ஜினை பெற்றதாக வரவுள்ள எக்ஸ்ட்ரீம் 160 ஆர் மாடல் முன்பாக இஐசிஎம்ஏ 2019 கண்காட்சியில் வெளியிட்ட எக்ஸ்ட்ரீம் 1.ஆர் கான்செப்ட்டினை நேரடியாக தழுவி வடிவமைக்கப்பட்டுள்ளது.

என்ஜின்

பொதுவாக இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற மாடல்களில் 160சிசி பிரிவில் 0-60 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 4.7 விநாடிகளை மட்டுமே எடுத்துக் கொள்ளும். இந்த பிரிவில் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி மாடல் 16.02 ஹெச்பி பவரை வழங்குகின்றது.

எக்ஸ்ட்ரீம் 160 ஆர் பைக்கின் என்ஜின் மிக நேர்த்தியாக ட்யூன் செய்யப்பட்டு மிக சிறப்பான முறையில் அதிகபட்சமாக 8,500rpm-ல் 15.2 ஹெச்பி பவர் மற்றும் 6,500rpm-ல் 14 என்எம் டார்க் வெளிபடுத்தும். உள்ளது. குறிப்பாக அப்பாச்சி 160 பைக்கின் என்ஜின் ஆயில் கூல்டு பெற்றுள்ளது. மற்றவை ஏர் கூல்டு என்ஜின் பெற்றதாக விளங்குகின்றது. பொதுவாக அனைத்து பைக்குகளுமே இந்த பிரிவில் 5 வேக கியர்பாக்ஸை பெற்றுள்ளன.

பிஎஸ்6 முறைக்கு மாற்றப்பட்டுள்ள ஜிக்ஸர் பைக்கின் பவர் வீழ்ச்சி அடைந்து தற்போது 13.6 ஹெச்பி மட்டும் வெளிப்படுத்துகின்றது. மற்றபடி எக்ஸ்பிளேடு, ஹார்னெட் மாடல்கள் பிஎஸ்6 முறைக்கு மாற்றப்பட்டு விரைவில் வெளியாக உள்ள நிலையில் இவற்றின் பவரும் அனேகமாக 13 முதல் 14 பிஹெச்பி க்குள் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. யமஹாவின் FZS பைக்கினை பொறுத்தவரை தொடக்க நிலையில் உள்ள மாடலாக இது அதிகபட்சமாக 12.9 ஹெச்பி பவரை மட்டும் வழங்கும் 150சிசி என்ஜினை கொண்டுள்ளது.

இந்த வரிசையில் கடுமையான போட்டியை பல்சர் என்எஸ்160 ஏற்படுத்தலாம். இதன் பிஎஸ்6 மாடலின் படி 16.72 hp வரை வெளிப்படுத்துகின்றது. எனவே இந்த பிரிவில் அதிகப்படியான பவரை இப்போது என்எஸ் 160 வெளிப்படுத்துகின்றது.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160 ஆர் பவர் மற்றும் டார்க் போன்றவற்றிலும் நேரடியாகவே எதிர்கொள்கின்றது.

டிசைன்

டிசைனை பொறுத்தவரை அப்பாச்சி 160, ஜிக்ஸர் போன்வற்றுக்கு கடும் சவாலினை வழங்கும் வகையில் நவீனத்துவமான வடிவமைப்ப்பினை பெற்று எல்இடி ஹெட்லைட், டெயில் லைட், டிஜிட்டல் கிளஸ்ட்டர் என பல்வேறு அம்சங்களை பெற்று ஹீரோ இம்முறை போட்டியாளர்களை கதிகலங்க வைத்துள்ளது.

மற்ற மாடல்களை விட எடை குறைவாக அமைந்துள்ளதால் மிக இலகுவாக இந்த பைக்கினை கையாளுவதற்கு ஏற்றதாக விளங்குகின்றது. அடுத்தப்படியாக, முக்கியமாக எக்ஸ்ட்ரீம் 160 ஆர் இருக்கையின் உயரம் 790 மிமீ மட்டும் கொண்டுள்ளது.  இந்த பிரிவில் உள்ள அனைத்து மாடல்களுமே முன்புறத்தில் டெலிஸ்கோபிக் மற்றும் பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரை கொண்டுள்ளன.

மற்ற பைக்குகள் 270மிமீ முன்புற டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 220 மிமீ பெற்றுள்ளன. ஆனால் முன்புறத்தில் 276 மிமீ டிஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. டிரம் பிரேக் ஆப்ஷனை கூடுதலாக குறைந்த விலை வேரியண்டினை கொண்டுள்ளது.

அப்பாச்சி பைக்கில் வழங்கப்பட்டுள்ள GTT நுட்பத்தினை போன்றே எக்ஸ்ட்ரீம் 160R பைக்கிலும் ஆட்டோ செயில் நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

விலை

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கின் விலை ரூ.99,500 முதல் ரூ.1,03,500 லட்சத்திற்குள் அமைந்துள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி விலை ரூ.1,00 லட்சம் முதல் 1.04 லட்சத்தில் அமைந்துள்ளது.

சுசுகி ஜிக்ஸர் பைக்கின் பிஎஸ்6 விலை ரூ.1.12 லட்சம்

ஹோண்டா ஹார்னெட் 160 ஆர், எக்ஸ்பிளேடு பிஎஸ்6 மாடல்கள் – ரூ.1 லட்சத்தில் துவங்கலாம்.

யமஹா FZS Fi பைக் விலை ரூ.1.03 லட்சம்

(எக்ஸ்ஷோரூம் விலை)

போட்டியாளர்ளுக்கு மற்றொரு கடுமையான சவாலினை விலை மூலம் ஹீரோ மோட்டோகார்ப் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

வேரியண்ட்

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R

டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V

சுசூகி ஜிக்ஸர்

பல்சர் NS 160

யமஹா FZ-Fi v3

Rear Drum

ரூ. 99,950

ரூ. 1,02,950

NA

NA

NA

Rear Disc

ரூ. 1,03,500

ரூ. 1,06,000

ரூ. 1,11,900

ரூ. 1,05,901

ரூ. 99,700 (ரூ. 1,01,700 FZS-Fi)

 

Exit mobile version