ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் : Hero Xtreme 200R

இந்தியாவின் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், மீண்டும் பிரிமியம் ரக சந்தையை நோக்கிய புதிய பயணத்தை வெற்றிகரமாக ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R ( Xtreme 200R) பைக் வாயிலாக தொடங்கி உள்ள நிலையில் எக்ஸ்ட்ரீம் 200ஆர் பற்றி தொடர்ந்து அறிந்து கொள்ளலாம்.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்

சந்தையில் விற்பனையில் உள்ள பிரபலமான 155சிசி-200சிசி வரையிலான பைக்குகளான ஜிக்ஸெர், ஹார்னெட் 160ஆர், எக்ஸ்-பிளேட், டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160, அப்பாச்சி ஆர்டிஆர் 180, அப்பாச்சி ஆர்டிஆர் 200 , பஜாஜ் பல்சர் 180 , பல்சர் 200 என்எஸ் உள்ளிட்ட பல்வேறு மாடல்க்களை நேரடியாக அல்லது மறைமுகமாக எக்ஸ்ட்ரீம் 200ஆர் எதிர்கொள்ள தயாராகியுள்ளது.

டிசைன் & ஸ்டைல்

ஹீரோ நிறுவனத்தின் முழுமையான சொந்த தயாரிப்பான மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் வடிவமைக்கப்பட்டுள்ள எக்ஸ்ட்ரீம் 200 ஆர் பைக் ஆனது 147 கிலோ எடை பெற்று மற்றும் உறுதி தன்மையுடன் கூடிய டைமன்ட் ஃபிரேம் கொண்டு ஆக்ரோஷமான ஸ்டைலிங் அம்சத்தை கொண்டதாக தோற்ற அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

மிக நேர்த்தியான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள பெட்ரோல் டேங்கில் சிறப்பான கிராபிக்ஸ் கொண்டு எக்ஸ்டீரிம் என பொறிக்கப்பட்டு, முன்புறத்தில் கூர்மையான அமைப்பை கொண்ட ஹெட்லேம்புடன், கண் இமைகளை போன்ற எல்இடி பைலட் விளக்குகளை பெற்றுள்ளது. மிக சிறப்பான சொகுசு தன்மையை நெடுந்தூர பயணத்திலும் வழங்கும் வகையில் அகலமான இருக்கையை கொண்டிருப்பதுடன், பின்புறத்தில் எல்இடி டெயில் விளக்குகளை பெற்றுள்ளது.

எக்ஸ்ட்ரீம் 200 பைக்கில் இரு நிற கலவை அம்சத்தை பெற்றிருப்பதனால் கருப்பு நிறத்துடன் சில்வர், கருப்பு நிறத்துடன் சிவப்பு, ஸ்போர்ட்ஸ் சிவப்பு, கிரே மற்றும் நீலம் ஆகிய 5 நிறங்களில் கிடைக்க உள்ளது.

எஞ்சின்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், தனது அச்சீவர் 150சிசி எஞ்சினை மிக சிறப்பான வகையில் புதுப்பித்து 200சிசி எஞ்சினாக மேம்படுத்தி மாற்றியமைத்துள்ளது.  எக்ஸ்ட்ரீம் 200R பைக்கில் பொருத்தப்பட்டுள்ள கார்புரேட்டர் கொண்ட 199.6 சிசி எஞ்சின் அதிகபட்சமாக 18.4 பிஹெச்பி ஆற்றல் மற்றும் 17.1 என்எம் டார்க் வழங்கும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. மிக சிறப்பான வகையில் எஞ்சினை பேலன்ஸ் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஷாஃப்ட்கள் அதிர்வுகளை முழுமையாக கட்டுப்படுத்தும் என ஹீரோ தெரிவித்துள்ளது.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 ஆர் பைக் அதிகபட்சமாக மணிக்கு 114 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனுடன், 0-60 கிமீ வேகத்தை எட்டுவதற்ககு வெறும் 4.6 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும்.

சராசரியாக நிகழ் வாழ்க்கையில் எக்ஸ்ட்ரீம் 200 ஆர் பைக்கின் மைலேஜ் சராசரியாக 45 முதல் 55 கிமீ மைலேஜ் வழங்கவல்லதாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முன்புறத்தில் 37 மிமீ கொண்ட ஃபோர்க்குகளுடன் டயரில் 276 மிமீ கொண்ட டிஸ்க் பிரேக்குடன், பின்புறத்தில் 7 ஸ்டெப் அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான மோனோஷாக் அப்சார்பரை பெற்று டயரில் 220 மிமீ டிஸ்க் பிரேக்குடன், கூடுதலாக சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ஆப்ஷனலாக வழங்கப்பட உள்ளது. முன்புறத்தில் 17 அங்குல வீலுடன் 100/80 ரேடியல் டயருடன் பின்புறத்தில், 130/70  டயர் பொருத்தப்பட்டுள்ளது.

நீண்ட கால காத்திருப்புக்கு பின்னர் சந்தையில் களமிறங்கியுள்ள எக்ஸ்ட்ரீம் 200 ஆர் பைக் விலை ரூ. 88,000 (எக்ஸ்-ஷோரூம் கவுகாத்தி)

 

எக்ஸ்ட்ரீம் 200R வாங்கலாமா ?

200சிசி சந்தை மிகவும் ஸ்டலிசாக மற்றும் பவர்ஃபுல்லாக மாறி உள்ள நிலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள எக்ஸ்ட்ரீம் , அதிகப்படியான பவர் மற்றும் ஸ்டைலிஷான லுக் விரும்பிகளை தவிர்த்து மற்ற அனைவருக்கும் ஏற்றதாக அமைந்திருக்கின்றது. குறிப்பாக குடும்பஸ்தர்கள் முதல் தினசரி பயணத்தை மேற்கொள்பவர்கள், மைலேஜ் விரும்பிகள் என அனைவருக்கும் ஏற்றதாக அமைந்திருக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

ஒட்டுமொத்தத்தில் பட்ஜெட்டில் ஒரு 200சிசி பைக் என்றால் எக்ஸ்ட்ரீம் 200R பைக் ஆகும்.

மற்றக்காம உங்கள் கருத்து என்ன பகிருங்கள்.. !

Exit mobile version