ஹீரோவின் எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக் விலை அதிகரிப்பு

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்

இந்தியாவின் மிகப்பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ பைக்கின், 200சிசி ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்கின் விலை அதிகரிக்கப்பட்டு, தற்போது தமிழக விற்பனையக விலை ரூ.90,900 என நிர்ணயம் செய்யபட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட விலையை விட தற்போது வரை ரூ.1,000 விலை உயர்த்தப்பட்டுள்ளது. உற்பத்தி மூலப் பொருட்களின் விலை அதிகரிப்பே முக்கிய காரணமாக அறியப்படுகின்றது.

எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக் விலை மற்றும் சிறப்புகள்

இந்தியாவின் 150 முதல் 200 சிசி வரையில் விற்பனை செய்யப்படுகின்ற பைக் மாடல்களுக்கு சவாலாக விளங்கும் எக்ஸ்ட்ரீம் 200 ஆர் மிகவும் ஸ்டைலிஷான தோற்ற பொலிவுடன் , இரு டயர்களிலும் டிஸ்க் பிரேக் ஆப்ஷனை பெற்று சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டு விற்பனைக்கு கிடைக்கின்றது.

எக்ஸ்ட்ரீம் 200R பைக்கில் பொருத்தப்பட்டுள்ள கார்புரேட்டர் கொண்ட 199.6 சிசி எஞ்சின் அதிகபட்சமாக 18.4 பிஹெச்பி குதிரைத் திறன் மற்றும் 17.1 என்எம் முறுக்குவிசை வழங்கும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 114 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனுடன், 0-60 கிமீ வேகத்தை எட்டுவதற்ககு வெறும் 4.6 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும்.

சுசூகி ஜிக்ஸெர், ஹோண்டா ஹார்னெட் 160ஆர், ஹோண்டா எக்ஸ்-பிளேட், டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160, அப்பாச்சி ஆர்டிஆர் 180, அப்பாச்சி ஆர்டிஆர் 200 , பஜாஜ் பல்சர் 180 , பல்சர் 200 என்எஸ் உள்ளிட்ட பல்வேறு மாடல்களுக்கு சவாலாக விளங்குகின்றது.

Exit mobile version