Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் விற்பனைக்கு வெளியானது

by MR.Durai
5 July 2018, 11:23 pm
in Bike News
0
ShareTweetSend

போட்டியாளர்களை கதிகலங்க வைக்கும் நோக்கில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், புதிதாக ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் மாடலை ரூ. 88,000 எக்ஸ்-ஷோரூம் விலையில் முதற்கட்டமாக 8 வடகிழக்கு மாநிலங்களில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

பல்ஸர் 180, பல்ஸர் 200, பல்ஸர் 220, டிவிஎஸ் அப்பாச்சி 160, டிவிஎஸ் அப்பாச்சி 180, அப்பாச்சி 200, சுசூகி ஜிக்ஸெர், ஹார்னெட் 160, எக்ஸ்-பிளேடு 160 என பல்வேறு மாடல்களை எதிர்கொள்ளும் நோக்கில் சவால் விடுக்கும் வகையில் அமைந்துள்ள எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக் ரூபாய் 88,000 விலையில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் கொண்டதாக அமைந்திருக்கின்றது.

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் வடிவமைக்கப்பட்டுள்ள எக்ஸ்ட்ரீம் 200 ஆர் பைக் ஆனது 147 கிலோ எடை பெற்று மற்றும் உறுதி தன்மையுடன் கூடிய டைமன்ட் ஃபிரேம் கொண்டு ஆக்ரோஷமான ஸ்டைலிங் அம்சத்தை கொண்டதாக தோற்ற அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

மிக நேர்த்தியான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள பெட்ரோல் டேங்கில் சிறப்பான கிராபிக்ஸ் கொண்டு எக்ஸ்டீரிம் என பொறிக்கப்பட்டு, முன்புறத்தில் கூர்மையான அமைப்பை கொண்ட ஹெட்லேம்புடன், கண் இமைகளை போன்ற எல்இடி பைலட் விளக்குகளை பெற்றுள்ளது. மிக சிறப்பான சொகுசு தன்மையை நெடுந்தூர பயணத்திலும் வழங்கும் வகையில் அகலமான இருக்கையை கொண்டிருப்பதுடன், பின்புறத்தில் எல்இடி டெயில் விளக்குகளை பெற்றுள்ளது.

எக்ஸ்ட்ரீம் 200 பைக்கில் இரு நிற கலவை அம்சத்தை பெற்றிருப்பதனால் கருப்பு நிறத்துடன் சில்வர், கருப்பு நிறத்துடன் சிவப்பு, ஸ்போர்ட்ஸ் சிவப்பு, கிரே மற்றும் நீலம் ஆகிய 5 நிறங்களில் கிடைக்க உள்ளது.

தனது அச்சீவர் 150சிசி எஞ்சினை மிக சிறப்பான வகையில் புதுப்பித்து 200சிசி எஞ்சினாக மேம்படுத்தி மாற்றியமைத்துள்ளது.  எக்ஸ்ட்ரீம் 200R பைக்கில் பொருத்தப்பட்டுள்ள கார்புரேட்டர் கொண்ட 199.6 சிசி எஞ்சின் அதிகபட்சமாக 18.4 பிஹெச்பி ஆற்றல் மற்றும் 17.1 என்எம் டார்க் வழங்கும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. மிக சிறப்பான வகையில் எஞ்சினை பேலன்ஸ் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஷாஃப்ட்கள் அதிர்வுகளை முழுமையாக கட்டுப்படுத்தும் என ஹீரோ தெரிவித்துள்ளது.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 ஆர் பைக் அதிகபட்சமாக மணிக்கு 114 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனுடன், 0-60 கிமீ வேகத்தை எட்டுவதற்ககு வெறும் 4.6 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும்.

சராசரியாக நிகழ் வாழ்க்கையில் எக்ஸ்ட்ரீம் 200 ஆர் பைக்கின் மைலேஜ் சராசரியாக 40 முதல் 48 கிமீ மைலேஜ் வழங்கவல்லதாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது

முன்புறத்தில் 37 மிமீ கொண்ட ஃபோர்க்குகளுடன் டயரில் 276 மிமீ கொண்ட டிஸ்க் பிரேக்குடன், பின்புறத்தில் 7 ஸ்டெப் அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான மோனோஷாக் அப்சார்பரை பெற்று டயரில் 220 மிமீ டிஸ்க் பிரேக்குடன், கூடுதலாக சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ஆப்ஷனலாக வழங்கப்பட உள்ளது. முன்புறத்தில் 17 அங்குல வீலுடன் 100/80 ரேடியல் டயருடன் பின்புறத்தில், 130/70  டயர் பொருத்தப்பட்டுள்ளது.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் ரூ. 88,000 (எக்ஸ்-ஷோரூம் கவுகாத்தி) ஆகும்.

 

Tags: Hero MotoCorpHero Xtreme 200R
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிய ஹீரோ டெஸ்டினி 125யின் 3,000 கிமீ பயண அனுபவத்தில் மைலேஜ் மற்றும் முதல் சர்வீஸ் கட்டண விபரம்!

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

பஜாஜ் பல்சர் N160 S மற்றும் N160 SS அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்!

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version