Automobile Tamilan

புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 250ஆர் விற்பனைக்கு வருகையா..!

all new hero xtreme 250r

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் சக்திவாய்ந்த 250சிசி எக்ஸ்ட்ரீம் 250R ஸ்போரட்டிவ் பைக்கின் தொலைக்காட்சி விளம்பர படப்படிப்பில் ஈடுபட்ட படங்கள் முதன்முறையாக இணையத்தில் கசிந்துள்ளதால் ஜனவரி 17ல் துவங்க உள்ள பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் விற்பனைக்கு வெளியிடப்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பொதுவாக, ஹீரோ தனது கான்செப்ட் நிலை மாடல்களை விற்பனைக்கு கொண்டு வர மிகவும் தாமதப்படுத்தி வந்த நிலையில் EICMA 2024ல் காட்சிப்படுத்திய எக்ஸ்ட்ரீம் 250ஆர் அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வருவது உறுதியாகியுள்ளது. குறிப்பாக ஹீரோவின் எக்ஸ்ட்ரீம் வரிசையில் 125cc , 160cc விற்பனையில் உள்ள நிலையில் 200சிசி மாடல் ஏற்கனவே நீக்கப்பட்டிருந்த நிலையில் 250cc உடனடியாக விற்பனைக்கு வரக்கூடும்.

புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள 250cc, DOHC, லிக்யூடு கூல்டு ஒற்றை சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 9,250rpm-ல் 30 bhp பவர் மற்றும் 7,250rpm-ல் 25 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற நிலையில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் உள்ளது.

மேலும் இந்த மாடல் 0 முதல் 60 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 3.25 வினாடிகளில் தொடும் என்று ஹீரோ மோட்டோகார்ப் கூறியிருந்தது.

முன்புறத்தில் கோல்டு நிறத்தில் 43 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் ப்ரீலோட் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் கொண்டுள்ள இந்த மாடலை ஸ்டீல் டிரெல்லிஸ் ஃப்ரேம் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அகலமான ரேடியல் டயர்களுடன் 17 அங்குல அலாய் வீல் உடன் முன்புறம் மற்றும் பின்புறம் டிஸ்க் பிரேக் உடன் சுவிட்சபிள் ஏபிஎஸ் முறைகளுடன் வருகிறது.

ரூ.2.20 லட்சத்திற்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் ஹீரோவின் எக்ஸ்ட்ரீம் 250R வரவுள்ளதால், இதற்கு போட்டியாக பல்சர் என்250 , கேடிஎம் 250 டியூக் மற்றும் சுசூகி ஜிக்ஸெர் 250 போன்றவை உள்ளது.

மேலும் படிக்க – ஹீரோ கரீஸ்மா எக்ஸ்எம்ஆர் 250 பைக்கின் சிறப்புகள்

spied image source

Exit mobile version