Warning: Trying to access array offset on false in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/jnews-amp/include/class/class-init.php on line 427

Warning: Trying to access array offset on false in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/jnews-amp/include/class/class-init.php on line 428
Honda Froza : 300 சிசி மேக்ஸி ஸ்டைல் ஹோண்டா ஃபோர்ஸா 300 விற்பனைக்கு வந்தது

300 சிசி மேக்ஸி ஸ்டைல் ஹோண்டா ஃபோர்ஸா 300 விற்பனைக்கு வந்தது

honda froza 300

பிரீமியம் மேக்ஸி ஸ்டைல் ஹோண்டா ஃபோர்ஸா 300 மாடலை இந்தியாவில் முதற்கட்டமாக 4 யூனிட்டுகளை மட்டும் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. ஆனால் விலை குறித்து எந்த தகவலும் வெளிப்படையாக அறிவிக்கப்படாமல் டெலிவரியை துவங்கியுள்ளது.

24.8 பிஹெச்பி பவர் மற்றும் 27.2 என்எம் டார்க் வழங்கும் 279 சிசி, திரவத்தால் குளிரூட்டப்பட்ட, SOHC எஃப்ஐ என்ஜினை கொண்டுள்ள இந்த ஸ்கூட்டரில் ஹோண்டாவின் செலெக்டபிள் டார்க் கன்ட்ரோல் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளதால், முன் மற்றும் பின்புற சக்கரங்களுக்கு இடையிலான வேக வேறுபாட்டைக் கண்டறிந்து இதன் மூலம் பின்புற சக்கரங்களுக்கு டிராக்‌ஷனை வழங்குகின்றது.

முன்புறத்தில் 15 அங்குல கேஸ்ட் அலாய் மற்றும் 14 அங்குல பின்புற டயர் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் 256 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் 240 மிமீ பின்புற டிஸ்க் பிரேக்குடன் இரட்டை சேனல் ஏபிஎஸ் கொண்டுள்ளது.

ஹோண்டா இந்தியாவின் பிக் விங் பிரீமியம் டீலர்கள் வழியாக விற்பனை செய்யப்பட்டுள்ள இந்த மாடல் முதன்முறையாக இந்தியாவில் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தோனேசியா உட்பட பல்வேறு ஏசியான் நாடுகளில் ஹோண்டா ஃபோர்ஸா 300 விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. முதலில் 4 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதால் அடுத்த பிஎஸ் 6 என்ஜின் பெற்ற மாடல் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு அறிவிக்கப்பட உள்ளது.

Exit mobile version