Automobile Tamilan

25 ஆண்டு கொண்டாட்ட ஹோண்டா ஆக்டிவா மற்றும் SP125 அறிமுகமானது

honda 25th year Anniversary edition

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியாவின் வெற்றிகரமான 25 ஆண்டுகளை கொண்டாடும் வகையில் ஆக்டிவா 110, ஆக்டிவா 125 மற்றும் SP125 ஆகியவற்றில் சிறப்பு 25-year Anniversary Editions வெளியிடப்பட்டுள்ளது.

Honda Activa 110

வழக்கமாக விற்பனையில் உள்ள மாடலை விட பிரீமியம் வசதிகளை பெற்ற 25-year Anniversary Edition லோகோ பெற்று அலாய் வீல்களில் பைரைட் பிரவுன் மெட்டாலிக் நிறத்தை பெற்று, இருக்கை மற்றும் உள் பேனல்களில் கஃபே-பழுப்பு/கருப்பு நிறத்தை கொண்டுள்ளது. ஆக்டிவா 110ல் பேர்ல் சைரன் ப்ளூ மற்றும் மேட் ஸ்டீல் பிளாக் மெட்டாலிக் என இரு நிறங்களை பெற்றுள்ளது.

இந்த மாடல் 109.51cc, ஒற்றை சிலிண்டர் PGM-Fi OBD2B இணக்கமான எஞ்சின் மூலம் இயக்கப்பட்டு ஆண்டுவிழா பதிப்புகளும் DLX வேரியண்டில் மட்டுமே விற்பனைக்கு ரூ.92,565 ஆக எக்ஸ்-ஷோரூம் விலை உள்ளது.

Honda Activa 125

ஆக்டிவா 110 போலவே ஆக்டிவா 125யிலும் பேர்ல் சைரன் ப்ளூ மற்றும் மேட் ஸ்டீல் பிளாக் மெட்டாலிக் என இரு நிறங்களுடன் பிரத்தியேக பாடி கிராபிக்ஸ், பைரைட் பிரவுன் மெட்டாலிக் நிற அலாய் வீல், இருக்கை மற்றும் பேனல்களில் கருப்பு நிறத்தை பெற்றதாக அமைந்துள்ளது.

மற்றபடி, எஞ்சின் பவர் மற்றும் டார்க்கில் எந்த மாற்றமும் இல்லை, 123.92cc, ஒற்றை சிலிண்டர் PGM-Fi OBD2B இணக்கமான எஞ்சின் பெற்று விலை ரூ.97,270 ஆக உள்ளது.

Honda SP125

அடுத்து பிரசத்தி பெற்ற ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் பெற்ற ஹோண்டா எஸ்பி125யில் பைரைட் பிரவுன் மெட்டாலிக் நிற அலாய் வீலுடன் பேர்ல் சைரன் ப்ளூ மற்றும் மேட் ஸ்டீல் பிளாக் மெட்டாலிக் என இரு நிறங்களுடன் மேம்பட்ட பாடி கிராபிக்ஸ் கொண்டதாக அமைந்துள்ளது.

மற்றபடி, எஞ்சின் வசதிகளில் எந்த மாற்றமும் இல்லை தொடர்ந்து LED ஹெட்லேம்ப், 4.2-இன்ச் TFT டிஸ்ப்ளே மற்றும் USB டைப்-சி சார்ஜிங் போர்ட். சைடு-ஸ்டாண்ட் எஞ்சின் கட்-ஆஃப் ஆகியவை பெற்று விலை ரூ.1,02,516 ஆக உள்ளது.

முன்பதிவு தற்பொழுது துவங்கப்பட்டுள்ள நிலையில் ஹோண்டாவின் டீலர்கள் மூலம் டெலிவரி ஆகஸ்ட் மாத இறுதி வாரத்தில் நடைபெற உள்ளது.

Exit mobile version