4 கோடி டூவீலர்களை விற்பனை செய்த ஹோண்டா டூ வீலர்

கடந்த 18 ஆண்டுகளில் சுமார் 4 கோடி டூவீலர்களை விற்பனை செய்துள்ள ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனையில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் எண்ணிக்கை 2 கோடியாகும்.

ஹீரோ ஹோண்டா கூட்டணியில் இருந்து பிரிந்த ஹோண்டா நிறுவனம், தொடர்ந்து ஸ்கூட்டர் சந்தையில் அபரிதமான பங்களிப்பை பெற்று விளங்குகின்ற நிலையில் , கடந்த 2000 ஆஃ ஆண்டு முதல் ஹோண்டா தனியாக சில மாடல்களை விற்பனை செய்ய தொடங்கிய நிலையில் முதல் 11 ஆண்டுகளில் ஒரு கோடி இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்தது. அதனை தொடர்ந்து அடுத்த மூன்று ஆண்டுகளில் அடுத்த ஒரு கோடி வாகனங்களும், கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் இரண்டு கோடி வாகனங்கள் என மொத்தமாக 4 கோடி டூவீலர்களை விற்பனை செய்துள்ளது.

குறிப்பாக கடந்த இரு வருடங்களாக இந்நிறுவனத்தின் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் விற்பனை மிக அதிப்படியான எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றது. குறிப்பாக இரு வருடங்களில் மாதந்திர விற்பனையில் முதலிடத்தை பெற்று விளங்குகின்றது.

சுமார் 2 கோடிக்கு அதிகமான ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், இதனை தொடர்ந்து 70 லட்சத்துக்கும் கூடுதலான ஹோண்டா சிபி ஷைன் 125 பைக் விற்பனை செய்யபட்டுள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் ஹோண்டா யூனிகார்ன், ஹோண்டா நவி, ஹோண்டா கிளிக், ஏவியேட்டர், ட்ரீம் யுகா, ஹார்னெட் போன்ற மாடல்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.