ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ் 6 ஸ்கூட்டரின் 5 முக்கிய அம்சங்கள்

இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ள முதல் பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணையான ஸ்கூட்டர் மாடலான ஹோண்டா ஆக்டிவா 125 மாடல் மூன்று விதமான வேரியண்டுகளில் பல்வேறு நவீன வசதிகள் மற்றும் புதிய அம்சங்களை முதன்முறையாக பெற்ற மாடலாக விளங்குகின்றது. முதன்முறையாக இந்த ஸ்கூட்டருக்கு ஹோண்டா நிறுவனம் 26 காப்புரிமை பெற்ற நுட்பங்களை இணைத்துள்ளது.

ஆக்டிவா 125 என்ஜின்

ஹோண்டாவின் eSP (Enhanced Smart Power) நுட்பத்தின் மூலம் சிறப்பான முறையில் மேம்படுத்தப்பட்ட என்ஜினை பெற்றுள்ளது. இந்த நுட்பம் PGM-FI, குறைந்த உராய்வு மற்றும் ACG ஸ்டார்டர் என மூன்று அம்சங்களை உள்ளடக்கியதாகும்.

புதிய வசதிகளுடன் ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் (PGM-FI – Programmed Fuel Injection) ஆதரவுடன் கூடிய 124 சிசி HET என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஃபேன் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 8.1 bhp பவர் மற்றும் 10.3 NM டார்க் வழங்குகின்றது. முந்தைய மாடலை விட 13 சதவீத கூடுதல் மைலேஜ் வழங்கவல்லதாக மேம்படுத்தப்பட்டுள்ளது. முந்தைய பிஎஸ் 4 மாடலை விட 8.52 bhp பவரை வெளிப்படுத்தியது.

இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல்

முதன்முறையாக பல்வேறு வசதிகளை 125சிசி ஸ்கூட்டர் சந்தையில் இணைத்துள்ளதை போன்றே இதன் கன்சோலில் ECU துனையுடன் நிகழ்நேரத்தில் பெட்ரோல் இருப்பை அறிந்து கொள்வதுடன், சராசரி மைலேஜை கொண்டு எத்தனை கிலோ மீட்டர் பயணிக்க இயலும் என்பதனை வழங்குகின்றது.

ஸ்டைல் மற்றும் வசதிகள்

முந்தைய மாடலை போன்ற தோற்ற அமைப்பினை கொண்டிருக்கும் இந்த ஸ்கூட்டரில் ஸ்டைலிஷான தோற்றத்தை வழங்குகின்ற எல்இடி ஹெட்லைட், க்ரோம் பாகங்கள், 3டி லோகோ உள்ளிட்ட வசதிகளுடன் H வடிவத்தை வெளிப்படுத்தும் டெயில்லைட்,  இருக்கை அடியில் உள்ள ஸ்டோரேஜ், முன்புற அப்ரானில் க்ளோவ் பாக்ஸ் மற்றும்  வெளிப்புறத்தில் உள்ள பெட்ரோல் நிரப்பிக் கொள்ளும் வசதி போன்றவறை கொண்டுள்ளது.

மேலும் ஆக்டிவா 125 ஸ்கூட்டரினை ஸ்டார்ட் செய்யும் போது சத்தமில்லாமல் இருக்க ACG மோட்டார் நுட்பத்தினை பயன்படுத்தியுள்ளது. இந்த மாடலில் ஐடியல் ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது. நிகழ் நேரத்தில் எரிபொருள் இருப்பு, மைலேஜ், உள்ளிட்ட வசதிகளை அறிவதற்கான புதிய புதிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரில், சைடு ஸ்டேண்டு இன்டிகேட்டர் ஆகியவற்றை பெற்றுள்ளது. கூடுதலாக சைடு ஸ்டேன்டு உள்ள சமயத்தில் வாகனத்தை ஸ்டார்ட் செய்வதனை தடுக்கும் இன்ஜின் இன்ஹைபிடார் பெற்றுள்ளது.

ட்யூபெலெஸ் டயருடன் முன்புறத்தில் 90/90-12 அங்குல வீல் மற்றும் பின்புறத்தில் 90/90-10 அங்குல வீல் பெற்று இரு டயர்களிலும் 130 மிமீ டிரம் பிரேக் மற்றும் டாப் டீலக்ஸ் வேரியண்டில் முன்புற டயரில் 190 மிமீ டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டு கூடுதலாக கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் மற்றும் பின்புறத்தில் 3 ஸ்டெப் அட்ஜெஸ்டபிள் ஸ்பீரிங் ஹைட்ராலிக் சஸ்பென்ஷன் கொண்டுள்ளது.

விலை

ஏப்ரல் 2020 முதல் நடைமுறைக்கு வரவுள்ள பிஎஸ் 6 என்ஜினை பெறும் முதல் ஸ்கூட்டராக விளங்குகின்றது. முன்பாக விற்பனை செய்யப்பட்ட டெல்லி எக்ஸ்ஷோரூம் மாடலை விட பேஸ் வேரியண்ட் விலை ரூ.6,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. டாப் வேரியண்ட் ரூ.9,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

ஹோண்டா ஆக்டிவா 125 (Standard & Drum) – ரூ.67,490

ஹோண்டா ஆக்டிவா 125 (Alloy & Drum) – ரூ.70,990

ஹோண்டா ஆக்டிவா 125 (Deluxe & Disc) – ரூ.74,490

(டெல்லி எக்ஸ்ஷோரூம்)

வருகின்ற செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ் 6 ஸ்கூட்டர் டெலிவரி தொடங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக முன்னணி நகரங்களிலும் படிப்படியாக அடுத்த சில வாரங்களுக்குள் நாடு முழுவதும் விற்பனைக்கு கிடைக்கும்.

போட்டியாளர்கள்

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற முதல் எஃப்ஐ என்ஜினை பெற்ற ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 மற்றும் டிவிஎஸ் என்டார்க் 125 போன்ற ஸ்கூட்டர்களுக்கு நேரடியான போட்டியை ஆக்டிவா 125 ஏற்படுத்த உள்ளது.