ஏவியேட்டருக்கு மாற்றாக புதிய ஸ்கூட்டரை ஹோண்டா வெளியிட திட்டம்

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் பல்வேறு மாடல்கள் தற்போது அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் ஒன்றான ஏவியேட்டர் ஸ்கூட்டருக்கு மாற்றாக புதியதொரு மாடலை தயாரித்து வருவதாகவும், இந்த ஸ்கூட்டர் விரைவில் விற்பனைக்கு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது இந்நிறுவனம் பிஎஸ்-6 மாசு உமிழ்வுக்கு இணையாக மாற்றிய மாடல்களில் ஆக்டிவா 6ஜி, ஆக்டிவா 125 மற்றும் டியோ என மூன்று ஸ்கூட்டர்களும், எஸ்பி 125, ஷைன் மற்றும் யூனிகார்ன் மட்டும் 200சிசி க்கு குறைவான பட்டியலில் உள்ளது. மற்றபடி, ஏவியேட்டர், கிரேசியா, ஆக்டிவா ஐ போன்றவற்றுடன் லிவோ, ஹார்னெட், எக்ஸ்பிளேடு போன்றவை இது வரை அறிவிக்கப்படவில்லை. குறிப்பாக ஏவியேட்டர் மற்றும் ஆக்டிவா ஐ நீக்கப்படுவது உறுதியாகியுள்ளது.

ஆக்டிவா மாடலை விட பிரீமியம் வசதிகளை பெற்றதாக கிடைத்து வந்த ஏவியேட்டருக்கு மாற்றாக வெளி வரவுள்ள புதிய மாடல் பல்வேறு பிரீமியம் வசதிகளை பெற்றதாக விளங்கும். குறிப்பாக எல்இடி ஹெட்லைட், டிஜிட்டல் கிளஸ்ட்டர், அலாய் வீல், டிஸ்க் பிரேக் உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்க வாய்ப்புகள் உள்ளது.

source

Exit mobile version