• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

CB300R : வருது..! ஹோண்டா சிபி300ஆர் பைக் விலை வெளியானது

by MR.Durai
18 January 2019, 10:26 am
in Bike News
0
ShareTweetSend

4c72b honda cb300r red

ரெட்ரோ மாடர்ன் ஸ்டைல் பெற்ற ஹோண்டா CB300R பைக் இந்திய சந்தையில் ரூ.2.50 லட்சம் விலைக்குள் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. ஹோண்டா சிபி300ஆர் பைக்கிற்கு ரூ.5,000 செலுத்தி முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.

இந்தியாவின் மிகப்பெரிய ஸ்கூட்டர் விற்பனையாளராக விளங்கும் ஜப்பான் நாட்டின் ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நிறுவனம் மிகவும் சவலான பிரிமியம் சந்தையில் ரெட்ரோ அம்சத்தை பெற்ற நவீன ஸ்போர்ட்டிவ் பைக் மாடலாக ஹோண்டா CB300R பைக்கினை வெளியிட திட்டமிட்டுள்ளது.

ஹோண்டா CB300R

நியோ ஸ்போர்ட்ஸ் கஃபே ஸ்டைலிங் பிரிவில் , கடந்த 2017  EICMA மோட்டார்சைக்கிள் அரங்கில் வெளியிடப்பட்ட சிபி300ஆர் மாடலில் மிகவும் பவர்ஃபுல்லான 286சிசி DOHC 4 வால்வுகளை கொண்ட என்ஜின் அதிகபட்சமாக 31.4hp பவர் மற்றும்  27Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

143 கிலோ கிராம் எடையை பெற்றுள்ள சிபி300ஆர் பைக்கில் 10 லிட்டர் பெட்ரோல் டேங்க் பெற்று முன்புறத்தில் மிகவும் ஸ்டைலிஷான வடிவமைப்பை வெளிப்படுத்தும் வட்ட வடிவ எல்இடி ஹெட்லைட் இடம்பெற்றுள்ளது. முழுமையான டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டரை கொண்டதாக விளங்குகின்றது.

41 மிமீ யூஎஸ்டி ஃபோர்கினை முன்புறத்தில் பெற்றதாகவும், பின்புறத்தில் ஒற்றை மோனோஷாக் அப்சார்பரை பெற்று விளங்குகின்றது. இந்த பைக்கின் 4 பிஸ்டன்களை கொண்ட 286 மிமீ டிஸ்க் முன்புற டயரில் இடம்பெற்றுள்ளது. பின்புறத்தில் 220மிமீ டிஸ்க் பிரேக் இடம்பெற்றுள்ளது. இந்த பைக்கில் டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் வழங்கப்படும்.

இந்தியாவில் மேட் ஆக்சிஸ் மெட்டாலிக் கிரே மற்றும் க்ரோமோஸ்பியர் ரெட் என இரு வண்ணங்களை பெற்று வாகனத்தின் உதிரிபாகங்கள் தருவிக்கப்பட்டு இந்தியாவில் ஒருங்கினைக்கப்பட உள்ளதால் விலை குறைவாகவே அமைந்திருக்கும்.

ரூ.2.50 லட்சம் விலைக்குள் அமைந்திருக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஹோண்டா CB300R விற்பனைக்கு அடுத்த சில மாதங்களில் வெளியாகலாம். தற்போது நாடு முழுவதும் உள்ள ஹோண்டா விங் டீலர்கள் வாயிலாக ரூ.5000 செலுத்தி முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.

Tags: HondaHonda CB300R
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version