வருகின்ற பிப்ரவரி 8, 2019-யில் விற்பனைக்கு வரவுள்ள ஹோண்டா சிபி300ஆர் பைக் விலை ரூ.2.50 லட்சத்திற்குள் அமைந்திருக்கும் என உறுதிப்படுத்துப்பட்டுள்ளது. ஹோண்டா விங்க் டீலர்கள் வாயிலாக ரூ.5,000 செலுத்தி முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.
மிகவும் ஸ்டைலிஷனான அம்ங்களை பெற்ற ரெட்ரோ ஸ்போர்ட்டிவ் கஃபே ரேசர் மாடலாக வரவுள்ள சிபி300ஆர் பைக்கில் சக்திவாய்ந்த 31.4hp பவர் மற்றும் 27Nm டார்க் வெளிப்படுத்துகின்ற 286சிசி DOHC 4 வால்வுகளை கொண்ட என்ஜின் இடம் பெற்றுள்ளது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
143 கிலோ கிராம் எடையை பெற்றுள்ள சிபி300ஆர் பைக்கில் 10 லிட்டர் பெட்ரோல் டேங்க் பெற்றுள்ளது. 300 கிமீ வரை ஒருமுறை பெட்ரோல் கலனை நிரப்பினால் பயணிக்க இயலும் என ஹோண்டா தெரிவித்துள்ளது.
ஹோண்டா சிபி300ஆர் பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 30.2 கிமீ ஆக இருக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முன்புறத்தில் மிகவும் ஸ்டைலிஷான வடிவமைப்பை வெளிப்படுத்தும் வட்ட வடிவ எல்இடி ஹெட்லைட்டில் இரண்டு பார்களை நடுவில் இடம்பெற்றுள்ளது. முழுமையான TFT டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டரை கொண்டதாக விளங்குகின்றது.
41 மிமீ யூஎஸ்டி ஃபோர்கினை முன்புறத்தில் பெற்றதாகவும், பின்புறத்தில் ஒற்றை மோனோஷாக் அப்சார்பரை பெற்று விளங்குகின்றது. இந்த பைக்கில் 4 பிஸ்டன்களை கொண்ட 286 மிமீ டிஸ்க் முன்புற டயரில் இடம்பெற்றுள்ளது. பின்புறத்தில் 220மிமீ டிஸ்க் பிரேக் இடம்பெற்றுள்ளது. சிபி300ஆர் பைக்கில் டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட உள்ளது.
ரூ.2.50 லட்சம் விலைக்குள் ஹோண்டா CB300R பைக் விலை அமைந்திருக்கும். வருகின்ற பிப்ரவரி 8ந் தேதி விலை விபரம் வெளியாக உள்ளது. தற்போது சென்னையில் எஸ்விஎம் மோட்டார்ஸ் மற்றும் கோவையில் உள்ள சூர்யபாலா மோட்டார்ஸ் என இரு ஷோரூம்களில் மட்டும் முன்பதிவு நடைபெறுகின்றது.
சிறிய ரக டிரக் சந்தையில் மஹிந்திரா வெளியிட்டுள்ள புதிய 'ZEO' எலெக்ட்ரிக் மினி டிரக் மாடலின் ஆரம்ப விலை ரூ.7.52…
இந்தியாவில் கியா நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ள மற்றொரு எலெக்ட்ரிக் மாடல் EV9 GT-Line எஸ்யூவி ஆடம்பரமான வசதிகள் பெற்று ₹…
390 டியூக் பைக்கில் இருந்து பெறப்பட்ட புதிய 5 அங்குல டிஎஃப்டி டிஜிட்டல் கிளஸ்டர் பெறுகின்ற 2024 ஆம் ஆண்டிற்கான…
இந்தியாவில் மிகவும் ஆடம்பர வசதிகள் கொண்ட கியா நிறுவனத்தின் புதிய கார்னிவல் எம்பிவி மாடல் விற்பனைக்கு ரூபாய் 63,90,000 விலையில்…
எம்ஜி மோட்டார் மற்றும் ஜேஎஸ்டபிள்யூ கூட்டணி அமைந்த பிறகு வெளியான வின்ட்சர் EV காரில் மிகவும் தாராளமான இடவசதியை பெற்று…
வரும் அக்டோபர் 4 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள நிசான் இந்தியா நிறுவனத்தின் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவி மாடலின் புதுப்பிக்கப்பட்ட…