Automobile Tamilan

பிரீமியம் ஸ்போர்ட்டிவ் ஹோண்டா CB 125 ஹார்னெட் வெளியானது

honda cb 125 hornet

125சிசி சந்தையில் ஹோண்டாவின் ஷைன் 125, எஸ்பி 125 மாடலை தொடர்ந்து CB 125 ஹார்னெட்டில் பல்வேறு பிரீமியம் வசதிகளுடன் ஸ்போர்ட்டிவான தோற்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டு டிவிஎஸ் ரைடர் 125, ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர், பல்சர் NS125, பல்சர் N125 ஆகியவற்றுக்கு கடும் சவாலினை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் 125சிசி சந்தையில் 45% சந்தை பங்களிப்பை கொண்டுள்ள ஹோண்டாவின் இந்த புதிய சிபி 125 ஹார்னெட் மூலம் மேலும் சந்தையில் அதிகப்படியான வாடிக்கையாளர்களை பெற குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு ஏற்றதாக அமைந்துள்ளது.

Honda CB 125 Hornet

சிபி 125 ஹார்னெட்டில் பொருத்தப்பட்டுள்ள 123.94cc ஒற்றை சிலிண்டர் ஏர்கூல்டு எஞ்சின் 7500 rpm-ல் 10.99bhp பவர் மற்றும் 6000 rpm-ல் 11.2Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 5-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. 5.4 வினாடிகளில் 0-60 கிமீ/மணி வேகத்தை எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

124கிலோ எடை கொண்டுள்ள 125 ஹார்னெட்டில் கோல்டன் நிறத்திலான அப்சைடு டவுன் ஃபோர்க் கொடுக்கப்பட்டு, 4.2-இன்ச் TFT டிஸ்ப்ளே உடன் ஹோண்டா ரோடு சிங் வசதி, USB சார்ஜிங், ஒற்றை-சேனல் ABS மற்றும் முழு LED லைட்டிங், ஸ்பிளிட் இருக்கை பெற்றதாக அமைந்துள்ளது.

CB125 ஹார்னெட்  லெமன் ஐஸ் மஞ்சள் நிறத்துடன் கூடிய பேர்ல் சைரன் ப்ளூ மற்றும் ஸ்போர்ட்ஸ் ரெட் நிறத்துடன் கூடிய பேர்ல் சைரன் ப்ளூ ஆகிய 4 நிறங்களில் கிடைக்கின்றது. ஆகஸ்ட் 1 முதல் முன்பதிவு தொடங்கும். அறிமுகத்திற்கு முன்பாக விலைகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version