ஹோண்டா நவி மற்றும் கிளிக் ஸ்கூட்டர் நீக்கப்படுகின்றது

navi

ஹோண்டா மோட்டார்சைக்கிள் ஸ்கூட்டர் தயாரிப்பாளரின் நவி மற்றும் கிளிக் என இரு ஸ்கூட்டர்களை ஏப்ரல் 2020 முதல் நிறுத்த திட்டமிட்டுள்ளது. போதிய வரவேற்பின்மை கராணமாக இந்த இரு மாடல்களும் இந்திய சந்தையிலிருந்து நீக்கப்படுகின்றது.

சர்வதேச அளவில் லத்தின் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் சிறப்பான வரவேற்பினை பெற்ற நவி இந்திய சந்தைக்காக தயாரிக்கப்பட்ட போதும் வரவேற்பினை பெற தவறியது. அடுத்தப்படியாக ஊரக பகுதிகளை முக்கிய விற்பனை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்ட கிளிக் ஸ்கூட்டரும் பெரிதாக வரவேற்பினை பெற தவறியது.

நவி மற்றும் கிளிக் என இரு மாடல்களிலும், 110சிசி என்ஜின் 8 bhp பவரையும், 8.94 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதில் சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இதே என்ஜினை ஆக்டிவா ஸ்கூட்டரிலும் இந்நிறுவனம் பயன்படுத்தியது குறிப்பிடதக்கதாகும்.

சமீபத்தில் இந்நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்ட புதிய பிஎஸ்6 மாடலான ஹோண்டாவின் ஆக்டிவா 125 மற்றும் ஆக்டிவா போன்றவை சிறப்பான வரவேற்பினை பெற தொடங்கியுள்ளது.

Exit mobile version