Warning: Trying to access array offset on false in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/jnews-amp/include/class/class-init.php on line 427

Warning: Trying to access array offset on false in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/jnews-amp/include/class/class-init.php on line 428
Husqvarna Vitpilen, Svartpilen 250 price : ரூ.1.80 லட்சத்தில் ஹஸ்குவர்னா விட்பிலன் 250, ஹஸ்குவர்ணா ஸ்வார்ட்பிலன் 250 விற்பனைக்கு வந்தது

ரூ.1.80 லட்சத்தில் ஹஸ்குவர்னா விட்பிலன் 250, ஹஸ்குவர்ணா ஸ்வார்ட்பிலன் 250 விற்பனைக்கு வந்தது

husqvarna-svartpilen-250-vitpilen-250

மிக நீண்ட எதிர்பார்ப்புகளுக்குப் பிறகு வெற்றிகரமாக இந்திய சந்தையில் ஹஸ்குவர்னா விட்பிலன் 250 மற்றும் ஹஸ்குவர்ணா ஸ்வார்ட்பிலன் 250 என இரு மாடல்களும் ரூ.1.80 லட்சம் அறிமுக (எக்ஸ்ஷோரூம்) விலையில் வெளியிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 45 நகரங்களில் உள்ள 100 டீலர்களில் மார்ச் மாதம் முதல் வாரத்திலும், அடுத்த 5 மாதங்களுக்குள் நாட்டின் 275 நகரங்களில் உள்ள 400 கேடிஎம் டீலர்கள் வாயிலாக ஹஸ்குவர்னா பைக்குகள் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. தற்போது அறிவிக்கப்பட்ட அறிமுக விலை குறிப்பிட்ட சில மாதங்களுக்கு மட்டும் கிடைக்கும். விற்பனையில் உள்ள கேடிஎம் 250 டியூக் பிஎஸ்6 மாடலை விட ரூ.26,000 குறைவாக அமைந்துள்ளது.

கேடிஎம் 250 டியூக் மாடலின் என்ஜின் உட்பட பெரும்பாலான பாகங்களை பகிர்ந்து கொண்டுள்ள இரு மாடல்களும் பொதுவாக வித்தியாணமான ரைடிங் தன்மையை வெளிப்படுதக் கூடியதாகும். கஃபே ரேசர் ஸ்டைலை விட்பிலன் 250 மாடலும், ஸ்கிராம்பளர் ஸ்டைலை ஸ்வார்ட்பிலன் 250 பைக் பெறுவதுடன் ஆஃப் ரோடு பயணத்திற்கு ஏற்ற அம்சங்களை பெறுகின்றது.

248.8 சிசி, திரவ குளிரூட்டும் முறை பெற்ற ஒற்றை சிலிண்டர் என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. 31 ஹெச்பி பவர் மற்றும் 24 என்எம் டார்க் வழங்குகின்றது. 153 கிலோ (Kerb) எடையுடன் விளங்கும் பைக்குகளில் உள்ள ஸ்டைலிங் அந்தந்த 401 போன்றே அமைந்துள்ளது. அலாய் வீல்களை பெற்று எம்ஆர்எஃப் டயரை கொண்டதாக விளங்குகின்றது.

ஸ்வார்ட்பிலன் 250 மற்றும் விட்பிலன் 250 ஆகியவை பஜாஜ் சக்கான்  ஆலையில் தயாரிக்கப்பட்டு கேடிஎம் ஹஸ்குவர்ணா டீலர்ஷிப் வழியாக விற்பனைக்கு கிடைக்கின்றது. இப்போது அறிவிக்கப்பட்டுள்ள உள்ள விலை குறிப்பிட்ட சில மாதங்களுக்கு மட்டும்.

Exit mobile version