Site icon Automobile Tamilan

இந்தியாவில் களமிறங்கும் ஜாவா பைக்குகள் விபரம்

இந்திய சந்தையில் ஜாவா பைக்குகளுக்கு என தனியான மதிப்பை பெற்று விளங்கும் நிலையில் மீண்டும் ஜாவா பைக்குகள் இந்தியாவில் மஹிந்திரா நிறுவனம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

ஜாவா பைக்குகள் – இந்தியா

மஹிந்திரா ஆட்டோமொபைல் பிரிவின் நான்கு சக்கர வாகனம், வர்த்தக வாகனம் மற்றும் டிராக்டர் பிரிவு சிறப்பான வளர்ச்சி பெற்று வரும் நிலையில் , மிகவும் சவாலாக விளங்கி வரும் இருசக்கர வாகன சந்தையில் மஹிந்திரா நிறுவனம் சிறப்பான பங்களிப்பை எதிர்காலத்தில் வழங்கும் வகையிலான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது.

சமீபத்தில் மணிகன்ட்ரோல் வணிக இதழுக்கு மஹிந்திரா சிஇஓ பவன் குன்கா அளித்த சிறப்பு பேட்டியில் ஜாவா பைக்குகள் அடுத்த நிதி ஆண்டின் இறுதி மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக குறிப்பிட்டாளர்.

தற்போது மஹிந்திரா டூ வீலர் பிரிவு செஞ்சூரா பைக், கஸ்டோ மற்றும் கஸ்டோ 125 ஸ்கூட்டர்களுடன் பிரிமியம் ரக மஹிந்திரா மோஜோ பைக் என மொத்தம் 4 இரு சக்கர வாகனங்களை தொடர்ந்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

பீஜோ ஸ்கூட்டர் நிறுவனத்தில் கனிசமான பங்குகளை கொண்டுள்ள மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் இந்நிறுவனத்தின் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்வதில் விலை போட்டியாளர்களுடன் ஒப்பீடுகையில் மிகப்பெரிய அளவில் வித்தியாசம் உள்ளதால் தற்காலிகமாக பீஜோ ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்யும் திட்டத்தை கைவிடப்பட்டுளதாக குறிப்பிட்டுள்ளார்.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மற்றும் புல்லட் 350 என இரு மாடல்களுக்கும் சவாலாக விளங்கும் வகையிலான ஜாவா 350 OHC இந்தியாவில் 2019 ஆம் ஆண்டின் தொடக்க மாதங்களில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

Exit mobile version