Site icon Automobile Tamilan

ஜாவா பைக்குகளில் டூயல் சேனல் ஏபிஎஸ் வருகை விபரம்

மீண்டும் தனது பாரம்பரியத்தை நிரூபிக்க வெளியாகியுள்ள ஜாவா பைக்குகளில், டூயல் சேனல் ஏபிஎஸ் மற்றும் ரியர் டிஸ்க் பிரேக் வருகை குறித்தான தகவல் வெளியாகியுள்ளது. ஜாவா பைக் விலை ரூ. 1.55 லட்சம் ஆகும்.

மஹிந்திரா மற்றும் மஹிந்திரா நிறுவனத்தின் கிளாசிக் லெஜென்ட்ஸ் வாயிலாக இந்தியாவில் மீண்டும் களமிறங்கியுள்ள ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் முதல் இரண்டு மாடல்களான கிளாசிக் ரகத்திலான ஜாவா மற்றும் நவீனத்துவத்தை பெற்ற ஜாவா 42 மாடல்களில் தற்போது முன்புறம் 280 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் 153 மிமீ டிரம் பிரேக் கொண்டு சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டுள்ளது.

வருகின்ற 2019 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் பின்புறத்தில் டிஸ்க் பிரேக் மற்றும் இரட்டை சேனல் ஏபிஎஸ் அடிப்படை பாதுகாப்பு அம்சமாக இணைக்கப்படும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே ஜாவா பைக்குகள் கூடுதல் பாதுகாப்பினை இதன் வாயிலாக பெறும்.

ஜாவா பைக் என்ஜின்

இரட்டை  புகைப்போக்கி குழல் பெற்ற 293சிசி ஒற்றை சிலிண்டர் அமைப்புடைய லிக்யூடு கூல்டு DOHC பயன்படுத்தப்பட்டுள்ள என்ஜின் அதிகபட்சமாக 27 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த ஜாவா எஞ்சின் பாரத் ஸ்டேஜ் -6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானது.

கிளாசிக் பாரம்பரியத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் வகையில் வட்ட வடிவிலான முகப்பு விளக்கு, பக்கவாட்டில் இருக்கும் டூல் பாக்ஸ், பெரும்பாலான பாகங்களுக்கு க்ரோம் பூச்சூ, அகலமான பின்புற மட்கார்டு ஆகியவற்றை பெற்றுள்ள இந்த மோட்டார்சைக்கிள்களில் டபூள் கார்டில் அடிச்சட்டத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டு முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குடன், பின்புறத்தில் கேஸ் சார்ஜ்டு இரட்டை ஷாக் அப்சார்பரை பெற்றுள்ளது.

சமீபத்தில் ஜாவா நிறுவனம் இரு டீலர்களை புனே நகரில் திறந்துள்ளது. மேலும் அடுத்த சில மாதங்களுக்குள் நாடு முழுவதும் முதற்கட்டமாக 100 டீலர்களை திறக்க உள்ளது.

ஜாவா மோட்டார்சைக்கிள் விலை பட்டியல்

ஜாவா – ரூ. 1.64 லட்சம்

ஜாவா 42 – ரூ. 1.55 லட்சம்

(டெல்லி விற்பனையக விலை)

Jawa and Jawa Forty Two Image Gallery

Exit mobile version