இந்தியாவில் முதல் ஜாவா பைக் டீலர்ஷிப் திறக்கப்பட்டது

1960, 70 களின் நாயகன் ஜாவா பைக் மீண்டும், இந்திய சந்தையில் மஹிந்திரா கிளாசிக் லெஜென்ட்ஸ் வாயிலாக, இரு புதிய பைக் மாடல்களை ஜாவா , ஜாவா 42 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் முதல் டீலர் திறக்கப்பட்டுள்ளது.

செக் குடியரசு நாட்டின் ஜாவா பிராண்டு ஒரு காலத்தில், இந்திய மக்களின் மிக விருப்பமான பிராண்டாக நிலவி வந்த நிலையில், தற்போது மீண்டும் புதிய பொலிவுடன் இரு புதிய மாடல்களை ஜாவா பிராண்டில் மஹிந்திரா வெளியிட்டிருந்த நிலையில் முதற்கட்டமாக புனே நகரில் இரு டீலர்களை ஜாவா திறந்துள்ளது.

புனேவின் புறநகர் பகுதிகளான பனேர் மற்றும் சின்ச்வாத் ஆகிய இடங்களில் ஜாவா டீலர்ஷிப்கள் முதன்முறையாக திறக்கபட்டு இந்த இடங்களில் ஜாவா பைக்குகள் டிஸ்பிளே, டெஸ்ட் டிரைவ், முன்பதிவு மற்றும் டெலிவரி போன்ற நடவடிக்கைக்களை மேற்கொள்ள கிளாசிக் லெஜென்ட்ஸ் திட்டமிட்டுள்ளது. இதனை தொடர்ந்து நாடு முழுவதும் 100 டீலர்களை ஜாவா நிறுவனம் விரைவில் திறக்க உள்ளது.

இரட்டை  புகைப்போக்கி குழல் பெற்ற 293சிசி ஒற்றை சிலிண்டர் அமைப்புடைய லிக்யூடு கூல்டு DOHC பயன்படுத்தப்பட்டுள்ள என்ஜின் அதிகபட்சமாக 27 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த ஜாவா எஞ்சின் பாரத் ஸ்டேஜ் -6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானது.

கிளாசிக் பாரம்பரியத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் வகையில் வட்ட வடிவிலான முகப்பு விளக்கு, பக்கவாட்டில் இருக்கும் டூல் பாக்ஸ், பெரும்பாலான பாகங்களுக்கு க்ரோம் பூச்சூ, அகலமான பின்புற மட்கார்டு ஆகியவற்றை பெற்றுள்ள இந்த மோட்டார்சைக்கிள்களில் டபூள் கார்டில் அடிச்சட்டத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டு முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குடன், பின்புறத்தில் கேஸ் சார்ஜ்டு இரட்டை ஷாக் அப்சார்பரை பெற்று முன்புறத்தில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உடன் கூடிய  280 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 153 மிமீ டிரம் பிரேக் வழங்கப்பட்டுள்ளது.

ஜாவா மோட்டார்சைக்கிள் விலை பட்டியல்

ஜாவா – ரூ. 1.64 லட்சம்

ஜாவா 42 – ரூ. 1.55 லட்சம்

(டெல்லி விற்பனையக விலை)