Automobile Tamilan

பாபர் ஸ்டைல் ஜாவா பெராக் பைக்கின் 5 முக்கிய சிறப்புகள்

ஜாவா பெராக் பைக்

ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் அடுத்த மாடலாக வெளிவந்துள்ள பெராக் கஸ்டமைஸ்டு பாபர் ரக பைக் பற்றி 5 முக்கிய சிறப்புகளை அறிந்து கொள்வதுடன், என்ஜின், விலை மற்றும் முன்பதிவு விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

டிசைன் & ஸ்டைல்

விற்பனையில் உள்ள ஜாவா கிளாசிக் மற்றும் ஜாவா 42 மாடல்களில் இருந்து மிகவும் மாறுபட்ட ஸ்டைலை பெற்ற பாபர் பைக்கில் ஒற்றை நிறமாக மேட் ஃபினிஷ் கருப்பு நிறம் வழங்கப்பட்டு தங்க நிறத்திலான ஜாவா லோகோ மற்றும் பின் ஸ்ட்ரீப் இணைக்கப்பட்டுள்ளது. 70 களின் பிரபலமான பாபர் ஸ்டைல் மாடலாக வந்துள்ள பெராக் வழக்கமான வட்ட வடிவ ஹெட்லைட்டை பெற்று மற்றபடி ஒற்றை இருக்கை ஆப்ஷன் வழங்கப்பட்டு இருக்கையின் பின்புறம் இணைக்கப்பட்ட டெயில் விளக்கினை கொண்டதாக அமைந்துள்ளது. அனைத்து பாகங்களுக்கும் கருமையான நிறத்தை வழங்கியுள்ளது.

பெராக் என்ஜின்

பிஎஸ்6 மாசு உமிழ்வுக்கு இணக்கமான 334 சிசி என்ஜின் பொருத்தப்பட உள்ளது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 31 ஹெச்பி பவர் மற்றும் 31 என்எம் டார்க் வெளிப்படுத்துகிறது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

மற்றவை

முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஹைட்ராலிக் ஃபோர்க்குகளை பெற்று 18 அங்குல வீலை கொண்டு பின்புறத்தில் ஒற்றை மோனோ ஷாக் அப்சார்பரை கொண்டு 17 அங்குல வீலை பின்புறத்தில் கொண்டுள்ளது. 280 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக் பெற்றதாக டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் கொண்டதாக அமைந்துள்ளது.

முன்பதிவு மற்றும் விநியோகம்

பெராக் பைக்கிற்கான முன்பதிவு ஜனவரி 1, 2020 முதல் இணையதளம் மற்றும் ஜாவா டீலர்கள் வாயிலாக தொடங்கப்படுவதுடன், விநியோகம் ஏப்ரல் 2, 2020 முதல் மேற்கொள்ள உள்ளதாக கிளாசிக் லெஜெண்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜாவா பெராக் விலை

ஜாவா மோட்டார் சைக்கிள் நிறுவனம் பெராக் பைக் ரூ .1.94 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) என நிர்ணயித்துள்ளது. இந்த விலைக் குறியீட்டில், மோட்டார் சைக்கிள் ஜாவா கிளாசிக் மாடலை விட ரூ .30,000 வரை கூடுதலாக அமைந்துள்ளது.

Exit mobile version