Site icon Automobile Tamilan

கவாஸாகி வல்கன் S க்ரூஸர் பைக் விற்பனைக்கு அறிமுகமானது

இந்தியாவில் முதன்முறையாக க்ரூஸர் ரக பைக் மாடலை இந்தியா கவாஸாகி மோட்டார்ஸ் நிறுவனம் ரூ.5.44 லட்சம் விலையில் கவாஸாகி  வல்கன் S அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் 2018 ஆட்டோ எக்ஸ்போ அரங்கின் வாயிலாக அதிகார்வப்பூர்வமாக காட்சிக்கு வெளியிடப்பட உள்ளது.

கவாஸாகி வல்கன் S

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் நின்ஜா 650, Z650 மற்றும் வெர்சிஸ் 650 ஆகியவற்றில் இடம்பெற்றுள்ள திறன் மிகுந்த 649 சிசி எஞ்சின் இடம்பெற்றுள்ளது. 650 சிசி எஞ்சின் அதிகபட்சமாக 61 பிஎஸ் ஆற்றல் , 63 என்எம் டார்க் வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

பல்வேறு விசேஷ அம்சங்களை கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள க்ரூஸர் ரக வல்கன் எஸ் மாடலில் வழங்கப்பட்டுள்ள எர்கோ ஃபீட் அம்சம் எவ்விதமான உயரத்தை கொண்டவர்களும் எளிதாக வாகனத்தை கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டதாகும்.  மேலும் இந்த பைக்கில் நமது தேவைக்கேற்ப மாற்றி அமைக்கும் வகையிலான ஹேண்டில் பார், ஃபூட் பெக் ஆகியவற்றை மூன்று விதமாக மாற்றியமைக்கலாம்.

முன்புறத்தில் 41 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்குடன், பின்புறத்தில் ப்ரீலோடு அட்ஜெஸ்டபிள் மோனோ ஷாக் அப்சார்பர் பெற்றதாக வந்துள்ள இந்த மாடலில் 300 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் 250 மிமீ டிஸ்க் பிரேக் பின்புறத்தில் கொண்டதாக வந்துள்ளது.

கவாஸாகி வல்கன் S க்ரூஸர் பைக் விலை ரூ. 5.44 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)

Exit mobile version