Automobile Tamilan

ரெட்ரோ ஸ்டைல் பெற்ற கவாஸாகி W175 பைக்கின் இந்திய அறிமுகம் எப்போது ?

கவாஸாகி W175

இந்திய சந்தையில் ரெட்ரோ ஸ்டைல் பெற்ற கவாஸாகி W175 பைக்கினை விற்பனைக்கு கொண்டு வருவதற்கான சாலை சோதனை ஓட்டத்தை மேற்கொண்டு வருகின்றது. தாய்லாந்து உட்பட பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற மாடலின் அடிப்படையிலான பைக் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றது.

கவாஸாகி W175

ரெட்ரோ டிசைன் அம்சத்தை கொண்ட டபிள்யூ175 பைக்கில் 13hp பவர் மற்றும் 13.2Nm டார்க் வெளிப்படுத்துகின்ற 177cc ஏர் கூல்டு இன்ஜின் கார்புரேட்டர் பொருத்தப்பட்ட மாடலாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்திய சந்தைக்கு ஏற்ப பிஎஸ்-6 மாசு உமிழ்வுக்கு இணையாக மாற்றப்பட்டு ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் கொண்டதாகவும், அடிப்படையான பாதுகாப்பு சார்ந்த சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் கொண்டிருக்கலாம்.

வட்ட வடிவத்திலான ஹெட்லைட் கொடுக்கப்பட்டு ஸ்போக்டூ வீல்ஸ், அனலாக் முறையிலான கிளஸ்ட்டர், பல்வேறு இடங்களில் ரெட்ரோ ஸ்டைலை நினைவுப்படுத்துகின்ற அம்சங்களை கொண்டிருக்கும். பெரும்பாலான உதிரிபாகங்கள் அதாவது 90 சதவீத உதிரிபாகங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட உள்ளதால் விலை குறைவாக அமைந்திருக்கும்.

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற பழமையை நினைவுப்படுத்தும் ராயல் என்ஃபீல்டு, ஜாவா, சமீபத்தில் வெளியான ஹைனெஸ் சிபி 350 போன்ற மாடல்களுக்கு மாற்றாக கவாஸாகி W175 ரூ.1.35 லட்சத்திற்குள் (எக்ஸ்ஷோரூம்) குறைவான விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது.

web title: Kawasaki W175 Spied in India Launch Soon

Exit mobile version