Automobile Tamilan

116 கிமீ ரேஞ்சுடன் கைனடிக் DX எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியானது

kinetic dx electric scooter

இந்தியாவின் மிகவும் பிரசத்தி பெற்ற ஸ்கூட்டராக விளங்கிய டிஎக்ஸ் மாடலை எலக்ட்ரிக் முறையில் 116 கிமீ ரேஞ்ச் வழங்கும் கைனடிக் DX விற்பனைக்கு ரூ.1.11 லட்சம் முதல் ரூ.1.17 லட்சம் வரை எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரெட்ரோ தோற்றத்தை நவீன முறையில் மாற்றியமைத்து பல்வேறு நவீன வசதிகளை கொண்டதாக அமைந்துள்ள DX ஸ்கூட்டரில் 8.8 அங்குல கிளஸ்ட்டர், க்ரூஸ் கண்ட்ரோல்,  டெலிமேட்டிக்ஸ் வசதிகள், திருட்டை தடுக்கும் வசதி, இலகுவாக சார்ஜிங் செய்து கொள்ளும் வகையில் நேரடியாக வயரை பிளக்கில் இணைக்கும் வசதி உள்ளிட்டவற்றுடன் பலவற்றை பெற்றுள்ளது.

Kinetic DX

DX+ டாப் வேரியண்டில் 2.6Kwh பேட்டரி பொருத்தப்பட்டுள்ள கைனடிக் டிஎக்ஸில் முழுமையான 100% சார்ஜிங்கில் 116 கிமீ வரை ரேஞ்ச் கிடைக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பவர் 4.8kw வெளிப்படுத்தும் நிலையில் அதிகபட்ச வேகம் மணிக்கு 90 கிமீ என உறுதிப்படுத்தப்பட்டு டெலிகைனடிக்ஸ் எனப்படுகின்ற டெலிமேட்டிக்ஸ் வசதிகளை கூடுதலாக பெற்றுள்ளது.

பேஸ் DX வேரியண்டில் 2.6Kwh பேட்டரி பொருத்தப்பட்டுள்ள கைனடிக் டிஎக்ஸில் முழுமையான சார்ஜிங்கில் 102 கிமீ வரை ரேஞ்ச் கிடைக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பவர் 4.7kw வெளிப்படுத்தும் நிலையில் அதிகபட்ச வேகம் மணிக்கு 80 கிமீ என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டரில் மற்ற மின்சார ஸ்கூட்டர்களை விட கூடுதலாக பூட் ஸ்பேஸ் 37 லிட்டர் வரை கொண்டுள்ள நிலையில் பேட்டரி ஃப்ளோர் போர்டில் வழங்கப்பட்டு ரேஞ்ச், பவர் மற்றும் டர்போ என மூன்று ரைடிங் மோடுகளை பெற்றதாக அமைந்துள்ளது.

மூன்று ஆண்டுகள் அல்லது 30,000 கிமீ வரை உத்தரவாதம் வழங்கப்படும் நிலையில்,  9 ஆண்டுகள் அல்லது 1 லட்சம் கிமீ உள்ளடக்கிய நீட்டிக்கப்பட்ட வாரண்டி ஆகியவற்றை செயல்படுத்துகின்றது.

(Ex-showroom)

முன்பதிவு தற்பொழுது துவங்கப்பட்டு kineticev.in என்ற இணையதளத்தில் நடைபெறுகின்றது. முன்பதிவு முதற்கட்டமாக 35,000 யூனிட்டுகளுக்கு மேற்கொள்ளப்படும் நிலையில் டெலிவரி அக்டோபர் முதல் துவங்க உள்ளது.

Exit mobile version