ஸ்போர்ட்டிவ் மற்றும் மிகுந்த பவரை வழங்குகின்ற கேடிஎம் 790 டியூக் இந்திய டீலர்களுக்கு வந்துள்ள படங்கள் இணையத்தில் வைரலாக தொடங்கியுள்ளது. டியூக் 790 பைக்கின் விலை ரூ. 7.80 லட்சத்தில் தொடங்கலாம்.
பஜாஜ் நிறுவனத்தின் அங்கமான கேடிஎம் மிக சிறப்பான செயல்திறன் மிக்க ஸ்போர்ட்டிவ் பைக்குகளை விற்பனை செய்து வரும் நிலையில், பவர்ஃபுல்லான 105hp பவர் மற்றும் 86Nm டார்க் வழங்குகின்ற 799சிசி மெஷின் பெற்ற மாடலை , இந்திய சந்தையில் வெளியிட உள்ளது. இதில் PASC சிலிப் அசிஸ்ட் கிளட்ச் உதவியுடன் 6 வேக கியர் பாக்ஸ் இடம் பெற்றிருக்கின்றது.
WP நிறுவனத்தின் 43 மிமீ டவுன் சைடு ஃபோர்க் மற்றும் கேஸ் நிரப்பபட்ட மோனோஷாக் அப்சார்பரை கொண்டுள்ள, இந்த மாடலில் முன்புற டயருக்கு 300 மிமீ ட்வீன் டிஸ்க் பிரேக் ஆப்ஷன் மற்றும் பின்புற டயருக்கு 240 மிமீ டிஸ்க் பிரேக் பெற்றதாக விளங்கும். பாஸ் கார்னரிங் ஏபிஎஸ் சிஸ்டம், நான்கு விதமான ரைடிங் மோடு, கஸ்டமைஸ் டிராக் மோடு வழங்கப்பட்டுள்ளது.
தோற்ற அமைப்பில் , கேடிஎம் பாரம்பரிய பொலிவுடன் கூடிய எல்இடி ஹெட்லைட், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டருடன் ப்ளூடூத் வாயிலாக மொபைல் போன் இணைப்பு என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது.
image source – maxabout.com
சில முன்னணி நகரங்களில் உள்ள டீலர்கள் வாயிலாக டியூக் 790 பைக்கிற்கு முன்பதிவு நடைபெற்று வருகின்றது. ரூ.30,000 செலுத்தி முன்பதிவு செய்துக் கொள்ளலாம். மெக்கானிக் சார்ந்த பயற்சியில் எடுக்கப்பட்ட படத்தை மேக்ஸ் அபோட் தளம் வெளியிட்டுள்ளது.
ஹீரோவின் மிகவும் ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் ஜூம் 125R சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அடுத்த சில வாரங்களுக்குள்…
எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்துடன் கூட்டணி அமைத்த பிறகு முதல் மாடலாக வின்ட்சர் இவி ரூ.9.99…
125சிசி சந்தையில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய டெஸ்டினி 125 ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திற்கு மிகப்பெரிய ஒரு விற்பனை எண்ணிக்கை…
இந்தியாவில் BYD நிறுவனம் தனது இ6 மாடலை புதிய இமேக்ஸ் 7 என்ற பெயரில் விற்பனைக்கு அக்டோபர் முதல் வாரத்தில்…
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் முதல் ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு மார்ச் 2025ல் வெளியாகும் என…
நாட்டின் முதன்மையான பயணிகள் வாகன தயாரிப்பாளரான மாருதி சுசுகி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் மாடலை அடுத்த சில மாதங்களுக்குள்…