• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ஆட்டோமேட்டிக் மேனுவல் டிரான்ஸ்மிஷனை வெளியிட்ட கேடிஎம்

by MR.Durai
9 October 2024, 6:54 am
in Bike News
0
ShareTweetSend

kmt AUTOMATED MANUAL TRANSMISSION AMT

மிகவும் பிரசத்தி பெற்ற ஸ்போர்ட்டிவ் பைக் தயாரிப்பாளரான கேடிஎம் நிறுவனம் ஏஎம்டி எனப்படுகின்ற AUTOMATED MANUAL TRANSMISSION (AMT) ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸினை கொண்டு வந்துள்ளது. முன்பாக, இது போன்ற நுட்பத்தை பைக்குகளில் பிஎம்டபிள்யூ, ஹோண்டா, யமஹா உள்ளிட்ட நிறுவனங்கள் கொண்டிருக்கின்றது.

KTM AMT

பெரிய மோட்டார்சைக்கிள்களில் சவாலாக உள்ள கியர் மாற்றுவதனை மிக எளிமையாக கையாளுவதற்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ள கேடிஎம் ஏஎம்டி நுட்பத்தில் ‘A Mode’ என்பது ஆட்டோமேட்டிக் முறையில் முழுமையாக இயங்கும் வகையிலும், M Mode என்பது கிளட்ச் உதவியில்லாமல் கியர்களை மாற்ற அனுமதிக்கின்றது. இதுதவிர வழக்கமான முறையில் கிளட்ச் பிடித்து கியர்களை மாற்றும் முறையும் உள்ளது.

செங்குத்தான, சரிவான இடங்கள் உட்பட கியர் மாற்றுவதற்கு சிரமத்தை ஏற்படுத்தும் ஆஃப் ரோடு பயணங்களில் மிகப் பெரிய உதவியாக அமைவதுடன், என்ஜின் ஆஃப் ஆகுவதனை மிகப்பெரிய அளவில் தடுக்கின்ற நன்மையை கொண்டுள்ளது.

கேடிஎம் அறிமுகப்பத்தியுள்ள ஏஎம்டி முறையில் P – N – 1 – 2 – 3 – 4 – 5 – 6 கியர் வரிசை உள்ளது. கியர்பாக்ஸில் உள்ள லாக்கிங் Pawl உதவியுடன் மிக இல்குவகாக எந்த இடத்திலும் பார்க்கிங் செய்ய P (Park) அனுமதிக்கின்றது.

எஞ்சின் இயங்கினாலும் இல்லாவிட்டாலும், முன் அல்லது பின் பிரேக்கைப் பயன்படுத்தினால் மட்டுமே 1st கியரை மாற்ற முடியும்.  PARK மற்றும் NEUTRAL என இரண்டையும் பயன்படுத்த கைப்பிடியில் சுவிட்ச்களின் மூலம் பயன்படுத்தி மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும்,

கியர் மாற்றும் வேகத்தைப் பொறுத்தவரை, கியர்பாக்ஸ் ECU மற்றும் டிரான்ஸ்மிஷன் கண்ட்ரோல் யூனிட் வழியாக மின்னணு முறையில் கட்டுப்படுத்தப்படுகிறது. எனவே, எலக்ட்ரோ மெக்கானிக்கல் ஷிப்ட் ஆக்சுவேட்டரால் ஷிப்ட்கள் மேற்கொள்ளப்படுவதனால் ஷிப்ட் டிரம்மை மாற்றுகிறது. இதனால் ஒரு கியரிலிருந்து மற்ற கியருக்கு மாறுவதற்கு வெறும் 50 மில்லிவிநாடிகள் மட்டுமே தேவைப்படுகின்றது. இது Quickshifter+ நுட்பத்தை விட மிக வேகமானதாக உள்ளது.

 

புதிய AMT நுட்பத்தினை, தேர்ந்தெடுக்கப்பட்ட வரவிருக்கும் கேடிஎம் மாடல்களில் ஆரம்பத்தில் கிடைக்கும், வரவிருக்கும் ஆண்டுகளில் கூடுதல் பைக்குகளில் ஏஎம்டி சேர்க்கப்படும் என மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் எந்த மாடலில் இடம்பெறும் என தெளிவுப்படுத்தவில்லை.

ஏற்கனவே, சோதனை ஓட்டத்தில் உள்ள கேடிஎம் 1390 சூப்பர் அட்வென்ச்சர் பைக்கில் முதன்முறையாக பெறக்கூடும் என எதிர்பர்க்கப்படுகின்றது.

Follow the All latest automobile Stories on automobiletamilan.com

Tags: KTMKTM 1290 Super Duke R
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version