Bike News

புதிய கேடிஎம் RC 390 சோதனை ஓட்ட படங்கள் வெளியானது

ktm rc 390

கேடிஎம் நிறுவனத்தின், அடுத்த தலைமுறை RC 390 பைக்கின் சாலை சோதனை ஓட்ட படங்கள் முதன்முறையாக வெளியாகியுள்ளது. புதிய ஆர்சி390 சூப்பர் ஸ்போர்ட்டிவ் பைக்கின் லூக்கில் மிகவும் ஸ்டைலிஷாக ஆஸ்திரியாவில் சோதனை செய்யப்பட்டு வருவது உறுதியாகியுள்ளது.

முன்பாக புதிய கேடிஎம் 390 டியூக் சோதனை செய்யப்பட்டு வரும் நிலையில் முழுமையான ஃபேரிங் ரக ஸ்டைல் மாடலான ஆர்சி 390 பைக்கில் புதுப்பிக்கப்பட்ட யூரோ 5 அல்லது பிஎஸ்6 என்ஜின் பொருத்தபட்டு சோதனை செய்யப்பட்டு வருகின்றது. இந்த என்ஜின் பவர் மற்றும் டார்க் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இருக்க வாய்ப்பில்லை.

புதுப்பிக்கப்பட்ட கேடிஎம் RC 390 தோற்ற அமைப்பில் பல்வேறு மாற்றங்கள் பெற்றுள்ளது. குறிப்பாக உயரமான விண்ட்ஸ்கிரீன் மற்றும் முகப்பு பேனலில் தற்காலிகமான ஹெட்லைட் யூனிட் பொருத்தப்பட்டுள்ளது. விற்பனைக்கு வரும்போது எல்இடி ஹெட்லைட் யூனிட் பொருத்தப்படலாம். ஃபேரிங் பேனலுடன் டர்ன் இன்டிகேட்டர் இணைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் டேங் பெரிதாக்கப்பட்டுள்ளது.  பின்புறத்தில் தட்டையான டெயில் பீஸ் மற்றும் ஸ்பிளிட் சீட் கொண்டதாக விளங்குகின்றது.

ஆர்சி390 பைக்கில் பொருத்தப்பட்டுள்ள  373.2cc லிக்யூடு கூல்டு என்ஜின் 42.9 bhp பவர் மற்றும்  35 Nm டார்க்கை வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் கிளட்ச அசிஸ்ட் பெற்றிருக்கும். 2020 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள EICMA மோட்டார் ஷோவில் முதன்முறையாக புதிய கேடிஎம் RC 390 அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது. இந்த மாடல் விற்பனைக்கு 2021 ஆம் ஆண்டின் தொடக்க மாதங்களில் எதிர்பார்க்கலாம்.

image source – ride apart

Share
Published by
MR.Durai
Tags: KTM RC 390